வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்! எப்படி?

சரும அழகுக்கு வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது பற்றி...
facial
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

உடல்நிலையைவிட தற்போது சருமத்திற்கு மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். அழகுக்காக பலரும் ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவிடுகின்றனர்.

ஆனால் அனைவராலும் அது முடியாத ஒன்று. அதனால் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு எளிதாக ஃபேஷியல் செய்ய முடியும்.

அழகு நிலையங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கலவைதான் முகத்தில் போடுவார்கள். இதனால் பின்நாள்களில் ஏதேனும் சருமத் தொந்தரவுகள் ஏற்படலாம். ஆனால் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தும்போது பெரும்பாலும் எந்த சருமத் தொந்தரவுகளும் ஏற்படாது.

கிளென்சிங்

சருமத்தை சுத்தம் செய்வது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

பால் சிறிதளவு எடுத்து, ஒரு பஞ்சை அதில் நனைத்து சருமத்தை துடைத்தெடுக்க வேண்டும். ரோஸ் வாட்டர் கொண்டும் அல்லது கடைகளில் விற்கும் ஏதேனும் ஒரு கிளென்சரைப் பயன்படுத்தலாம். பேஷ் வாஷ் கொண்டும் முகத்தைக் கழுவலாம்.

ஸ்கிரப்பிங்

சர்க்கரை, தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்வது போல சில நொடிகள் செய்யலாம். சர்க்கரை, தேன், காபித்தூள் கலந்தும் இவ்வாறு செய்யலாம்.

பின்னர் சில நிமிடங்கள் அப்படியே விட்டு முகத்தை கழுவிவிடலாம்.

ஸ்ட்ரீமிங்

நீராவி பிடிப்பது. தண்ணீரை கொதிக்க வைத்து உங்களுக்கு தாங்கக்கூடிய சூட்டில் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சரும துவாரத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியே வந்துவிடும்.

பேஸ் மாஸ்க்

கடலை மாவு, மஞ்சள், தேன், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றைக் கலந்து பேஸ் மாஸ்க் போடலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் முகத்தைக் கழுவலாம்.

டோனர்/ மாய்சரைசர்

கற்றாழை ஜெல் அல்லது ரோஸ் வாட்டரை முகத்தில் தடவலாம். தேவையெனில் மாய்சரைசர் தடவலாம்.

இதில் உங்கள் சருமத்திற்கு ஏதேனும் ஒத்துக்கொள்ளாத பொருள்கள் இருந்தால் தவிர்த்துவிடவும்.

கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க கருவளையத்தைப் போக்க வெள்ளரிக்காயைப் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் சாறை கண்களைச் சுற்றி தடவலாம் அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் சிறிது நேரம் வைக்கலாம். 

இயற்கையாக சருமம் பொலிவுபெற தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். முடிந்தவரை வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

cleansing, exfoliating, steaming, masking, toning and moisturizing.. How to do a facial at home?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com