தைராய்டு பிரச்னையா! இதைச் சாப்பிடுங்கள்!!

தைராய்டு பிரச்னைக்கு உதவும் முக்கிய உணவுப்பொருள் பற்றி...
thyroid

thyroid

Center-Center-Kochi
Published on
Updated on
1 min read

உடலில் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பியின் பெயர்தான் தைராய்டு. இது நாளமில்லா அமைப்பின் ஒரு பகுதி. இந்த சுரப்பி, தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) போன்ற தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல அத்தியாவசியச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வளர்சிதை மாற்றம், ஆற்றல், இனப்பெருக்கம், உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன.

தைராய்டு சுரப்பி, இந்த ஹார்மோன்களை குறைவாக உற்பத்தி செய்யும்போது அது ஹைப்போ தைராய்டிசம் (செயல்குறைந்த தைராய்டு) என்றும், அதிகமாக உற்பத்தி செய்தால் அது ஹைப்பர் தைராய்டிசம் (அதிகப்படியான தைராய்டு) என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இப்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு அதிகமாக தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களினால் தைராய்டு சுரப்பியில் மாற்றம் ஏற்படுகிறது.

இந்நிலையில் தைராய்டு செயல்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருளாக கொத்தமல்லியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் கொத்தமல்லி விதைகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் நிறைய சத்துகள், நோயெதிர்ப்புப் பொருள்கள் இருப்பதால் தைராய்டு பிரச்னைகளை படிப்படியாக சரிசெய்கிறது.

கொத்தமல்லி விதைகள், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி தண்ணீர் என எந்த வடிவிலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கொத்தமல்லி விதைகள் அல்லது கொத்தமல்லி இலைகளை துவையல்/சட்னி செய்து சாப்பிடலாம்.

கொத்தமல்லி விதைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து பருகலாம்.

பயன்கள்

செரிமானத்தைத் தூண்டி உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

தைராய்டு பிரச்னையை சரிசெய்வதில் முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. எனினும் தைராய்டு இருப்பவர்கள், தங்களுக்கு எந்த ஹார்மோன் பிரச்னை மற்றும் எந்த நிலை என்பதை அறிந்து, மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்வது நல்லது.

உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்கிறது.

முடி உதிர்வைக் குறைக்கிறது.

தோல் பிரச்னைகளை சரிசெய்கிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

கொத்தமல்லி இலைகள், தைராய்டு மட்டுமன்றி இதயம், மூளை செயல்பாடு, சிறுநீரகம், கல்லீரல், ரத்த நாளங்கள், செரிமான அமைப்புகளின் சரியான செயல்பாட்டுக்கு இது பெரிதும் உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com