

ஜிலேபியை ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு, டோனட்டை சாப்பிடவும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும் அதிகம் யோசிப்பவராக இருந்தால் இந்த தகவல்கள் நிச்சயம் அவர்களுக்குத்தான்.
காரணம், இரண்டுமே உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும், சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அளவுக்கு அடிமையாக்கும் செயற்கைப் பொருள்களைக் கொண்டுள்ளது. பெரிய அளவில் சத்துகள் எதுவும் இல்லாதவை.
இரண்டுமே சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இரண்டுமே எண்ணெயில் நன்கு பொறிக்கப்படுகின்றன. பல நேரங்களில் ஏற்கனவே பொறிக்கப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களில்தான்.
இரண்டுமே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் மெருகேற்றப்பட்டிருக்கும். இதனால் உடலின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த இரண்டில் எதைச் சாப்பிட்டாலும் குடலில் நுண்ணுயிரியல் பாதிப்பு மற்றும் குடல் கசிவு பிரச்னைகள் ஏற்படலாம்.
எனவே, ஜிலேபியோ, டோனட்டுகளோ அவ்வப்போது வாங்கி சாப்பிடாமல், எப்போதாவது சாப்பிடுவதே நல்லது. உண்மை என்னவென்றால், இரண்டுமே சத்தான உணவுப் பட்டியலில் இருக்காது. இரண்டுமே ஜங்க் உணவுதான் என்பதை புரிந்து கொள்வது அவசியம்.
மேலும், ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு மாலை உணவுகளில் அதிகம் இணையும் சமோசா, ஜிலேபி போன்ற உணவுப் பொருள்களில் இருக்கும் சர்க்கரை உள்ளிட்ட விவரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது.
நாட்டில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில், ஒவ்வொரு உணவுப் பொருளிலும் இருக்கும் அடிப்படை பொருள்கள் என்னென்ன என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதாரணமாக சமோசா, ஜிலேபி போன்றவற்றை மக்கள் தவிர்ப்பது நலம் என்றும் தெரிவித்திருந்தது.
முன்னதாக, சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருப்பது போல, இதுபோன்ற உணவுகளிலும் அது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. தந்தைக்கு மாரடைப்பு: ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.