‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கிரீன் டீ குடிப்பது நல்லதா? 2 வாரங்கள் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விளைவுகள் பற்றி...

News image

ENS

Updated On :11 பிப்ரவரி 2026, 12:01 pm IST

உடல் எடையைக் குறைக்க பலரும் இன்று பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், பெரும்பாலாக அனைவரது டயட்டிலும் 'கிரீன் டீ' முக்கிய இடம் பெறுகிறது. கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா? அது உடலுக்கு எந்த அளவுக்கு நல்லது? பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?

கிரீன் டீ ஒரு ஆரோக்கியமான பானம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், உடலில் கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கிரீன் டீ அருந்தலாம் என்றே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் வழக்கமாக அருந்தும் டீ / காஃபிக்குப் பதிலாக ஒரு 2 வாரங்களுக்கு கிரீன் டீ அருந்தி வந்தால் உடலில் நல்ல மாற்றத்தைக் காணலாம். கல்லீரல், கணைய செயல்பாட்டை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பால் டீயைத் தவிர்த்து சர்க்கரை இன்றி கிரீன் டீ சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

மைக்ரோபயாலஜி மற்றும் இம்யூனாலஜி இதழில் 2012-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கிரீன் டீ சாப்பிடுவது குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கிரீன் டீ அருந்தத் தொடங்கிய 10 நாள்களில் இந்த மாற்றம் தொடங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதய ஆரோக்கியத்திற்கு கிரீன் டீ உதவும் என்கின்றனர் நிபுணர்கள். இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம் குறைவது, கொழுப்பு குறைவது, நினைவாற்றல் அதிகரிப்பு, டிமென்ஷியா ஏற்படும் அபாயம் குறைவு, தூக்கம் மேம்படுதல், மனத்தெளிவு உள்ளிட்ட நன்மைகள் கிரீன் டீ-யில் உள்ளன.

2022-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 4 வாரங்களுக்கு கிரீன் டீ குடிப்பது, ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து குடலில் கொழுப்புகளைக் குறைப்பது ஆய்வில் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடை குறையுமா?

கிரீன் டீ அருந்துவது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் என்றே பல ஆய்வுகள் கூறுகின்றன.

கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் இதய ஆரோக்கியம், எடைக் குறைப்பு, அறிவாற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை(பிஎம்ஐ) மற்றும் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க கிரீன் டீ உதவும் என்று 2020ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் கிரீன் டீ அதிகமாக உட்கொள்ளும்போது தலைவலி, தூக்கமின்மை, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், உடல் இரும்புச்சத்து உறிஞ்சுதலில் குறைபாடு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு இரண்டு கப் கிரீன் டீ குடிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கிரீன் டீ சாப்பிடும்போது தொந்தரவுகள் ஏற்படும்பட்சத்தில் அதைத் தவிர்ப்பது நல்லது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Is green tea good for health and used to reduce body weight

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.