ஆண்டு முழுவதும் சிங்கிளாக இருப்பது அவ்வளவு ஒன்றும் கடினமல்ல, சொல்லப்போனால் பெரிய வருத்தங்களோ, செலவுகளோ இல்லாமல் அழகாகவே நாள்கள் செல்லும். ஆனால், இந்த காதலர் தினத்தைத் தவிர.
பொதுவாகவே காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பது நிச்சயம் பொருத்தமற்றதாக இருக்கலாம். காரணம், நகர வீதிகளும் சமூக வலைத்தளங்களும் காதல் ரசத்தால் மூழ்கிக் கொண்டிருக்கும். அடித்துச் செல்லும் வெள்ளத்தில் கால் சட்டை நனையாமல் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களைப் போல சிங்கிளாக இருப்பவர்கள் எதையும் பார்க்காமல் கடந்து செல்வது சற்று கடினம்தான்.
ஆனால் இதெல்லாம் உண்மையில்லை.. காதலர் தினம் என்பது வெறும் ஜோடிகளுக்கானது மட்டுமல்ல. அன்பைக் கொண்டாடும் நாளாகவும் உள்ளது. எனவே, இந்த காதலர்கள் கூட்டத்திலிருந்து நாம் எங்கும் ஓடி ஒளிய வேண்டாம். நாம் எந்த நகரத்தில் இருக்கிறோமோ, அந்த நகரின் மீதான காதலை இன்று வெளிப்படுத்தலாம் என்கிறார்கள் பல ஆண்டுகளாக சிங்கிளாகக் காதலர் தினத்தைக் கொண்டாடி வருபவர்கள்.
வாழும் நகரத்துடன் ஒருநாள்
வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டாம். நாம் பல ஆண்டுகளாக வாழும் நகரின் பல அழகிய இடங்களைப் பார்க்காமலே இருந்துகொண்டிருப்போம். அவற்றை தேடிப்பிடித்து இந்த நாளில் சென்று சுற்றிப்பார்க்கலாம். நம்முடைய நகருடனான காதலை இன்று கொண்டாடலாம். தனிமையில் செல்லும்போதுதான் உலக நிகழ்வுகள் பலவற்றின் அழகியலை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்.
சிங்கிள் கூட்டத்தைக் கூட்டுங்கள்
இந்த உலகில் நாம்மட்டும்தான் என்ன சிங்கிளா.. எத்தனை பேர் இருப்பார்கள். நமது நண்பர்களில் நம்மைப்போலவே இருப்பவர்களை அழைத்து இன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். எத்தனையோ பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. ஜோடியாகத்தான் மகிழ வேண்டும் என்று இல்லை.. நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு மகிழ்ச்சி தானாகவே வந்துவிடுமே..
சிறுவயது காதலைச் சொல்லுங்கள்
சிறு வயதில் காதலித்த யாரிடமாவது சென்று காதலைச் சொல்லி அடியெல்லாம் வாங்க வேண்டாம். உங்கள் 10 வயதில் மிகவும் நேசித்த நாய்க்குட்டி, கோயில், பிடித்த நபர் என எதைப்பற்றியாவது சிந்தித்து ஒரு சிறு குறிப்பு எழுதுங்கள். இது உங்கள் வாழ்வின் இனிமையான நாள்களை மீள் உருவாக்கவும், இனிமையான நினைவுகளில் மூழ்கவும் வழிவகுக்கலாம். யார்கண்டது.. இவ்வாறு எழுதும்போது நாம் ஒரு பெரிய எழுத்தாளர் என்பதையும் கண்டறியலாம்.
உங்களுக்கே பரிசளித்துக் கொள்ளலாம்
வெகு நாள்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளை இன்று தேடிக் கண்டுபிடித்து உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள். இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்கும்.
Summary
If you are single and celebrating Valentine's Day on Feb. 14th...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1,008 கிடா வெட்டு... ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா!

உங்களை உயர்த்தும் ஒரு நிமிடக் கதைகள் 100

மக்களாட்சியின் தேக்க நிலை!
தகரும் ஊழல் கோட்டைகள்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




