தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்!

M.A. சுசீலா

M.A. சுசீலா

எம்.ஏ. சுசீலா, மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப் படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதை 'ஓர் உயிர் விலை போகிறது’, அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற்றது. 80-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சில கதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'கண் திறந்திட வேண்டும்' என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சித் தொடரில் 'நான் படிக்கனும்' என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இரு நாவல்களை 'குற்றமும் தண்டனையும்' (2007), அசடன் (2011) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்பில் தஸ்தயெவ்ஸ்கியின் மூன்று குறுங்கதைகள் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்' என்ற பெயரில் வந்துள்ளன. இவரது முதல் நாவல் 'யாதுமாகி', 2014-ல் வெளிவந்தது. 'அசடன்' நாவல் மொழிபெயர்ப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயத்தின் ஜி.யூ. போப் விருது ஆகியவை கிடைத்துள்ளன. www.masusila.com என்ற பெயரில் வலைத்தளம் தொடங்கி எழுதி வருகிறார். * ரஷ்ய இலக்கியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட சுசீலாவுக்கு, ரஷ்ய இலக்கிய மேதைகள் வாழ்ந்து மறைந்த அந்த சோஷலிச மண்ணுக்கு ஒருமுறையாவது சென்றுவர வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அவர் ரசித்து வாசித்த இலக்கிய ஆளுமைகளின் நினைவுகள் ஊடறுக்க, அவர் ரஷ்ய சென்று திரும்பிய நாட்களை தினமணி டாட் காம் வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்கிறார். வாரந்தோறும் படியுங்கள்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை