தொழில்முனைவோர் பாலி கிளினிக்!

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்கள்,  அவர்களுடைய பிரச்னைகளுக்கான
தொழில்முனைவோர் பாலி கிளினிக்!

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்கள், அவர்களுடைய பிரச்னைகளுக்கான தீர்வு, மூலதனம் திரட்டுதல், தொழில் நிறுவனத்தை மேலாண்மை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கு தொழில்முனைவோர் பாலிகிளினிக் என்ற முறையில் சென்னை கிண்டியில் 'டான்ஸ்டியா-எஃப்என்எஃப்' என்ற சேவை மையம் இயங்கி வருகின்றது.

புதிதாகத் தொழிலைத் தொடங்க விரும்பும் குறு, சிறு தொழில் முனைவோருக்கு எவ்வாறு அதனைத் தொடங்குவது, எப்படி அதனைப் பதிவு செய்வது, தொழில்நுட்ப உதவிகளை எவ்வாறு பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிவதில்லை. அவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும், சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறுதொழில்கள் சங்கம் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த எஃப்என்எஃப் சேவை மையம் ஆகியவை இணைந்து,  டான்ஸ்டியா-எஃப்என்எஃப் சேவை மையத்தை தொடங்கி இயக்கி வருகின்றது.  

ஏற்கெனவே நடந்து வரும் தொழில் நிறுவனங்களுக்கு தரச்சான்று பெறுதல், வணிக முத்திரை, காப்புரிமை ஆகியவற்றைப் பதிவு செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி வழிமுறைகள், எரிசக்தி சேமிப்பு, எரிசக்தி தணிக்கை, நலிவுற்ற தொழில் நிறுவனங்களைப் புனரமைத்தல், புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு தொழில் திட்ட அறிக்கை தயாரித்து அளித்தல், தொழில் சம்பந்தமான பல்வேறு ஆய்வறிக்கை வெளியிடுதல் ஆகியவற்றை டான்ஸ்டியா-எஃப்என்எஃப் சேவை மையம் செயல்படுத்தி வருகின்றது.   மிகக் குறைந்த அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றது.

மேலும் தகவல்களுக்கு :
TANSTIA - FNF Service Centre,
B22, Industrial Estate, Guindy, Chennai  600 032.
Ph: 044  225011451  4353440  9940102449
Email: tfsc@tanstiafnf.com
இணையதளம்: http://www.tanstiafnf.com/
 

- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com