இந்தப் புத்தாண்டில் ரூ.10,000/-க்குள் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டுமா?
By உமா | Published On : 08th December 2017 01:14 PM | Last Updated : 08th December 2017 01:30 PM | அ+அ அ- |

நம்மைச் சுற்றியுள்ள உலகமே ஆண்ட்ராய்டில் இயங்குகிறதோ என்று எண்ணும் அளவுக்கு நம்மில் பலர் ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களாகிவிட்டோம். செல்ஃபோன் என்பது கூடுதல் வசதி என்பது மாறி அத்யாவசியமான பொருள் போலாகிவிட்டது. காரணம் தினந்தோறும் வாட்ஸ் அப் தகவல்கள், டிஜிட்டல் செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் என மக்கள் காலத்துக்கு தகுந்தபடி தங்களின் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். இது தகவல் புரட்சிக்கான ஒரு காலகட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இது சரியா தவறா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது எனினும், தற்போதைய நிலையில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஸ்மார்டாக இருப்பதற்குக் ஒரு காரணம் இத்தகைய நவீன வசதிகளே! இந்தப் புத்தாண்டில் உங்கள் பட்ஜெட்டில் புதிய ஃபோன் வாங்க இடம் இருந்தால் இந்தத் தகவல்கள் உங்களுக்குப் பயன்படக் கூடும். இந்த ஃபோன்களின் விலை பத்தாயிரத்திற்கும் குறைவானது.
லெனொவா கே6 பவர் (Lenovo K6 Power)
ஜியோமி ரெட் மி நோட் 3 போன்ற வடிவமைப்பு பெற்ற செல்போன் இது. இது கோல்டன், சில்வர் மற்றும் பிரவுஜ் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 3எஸ் பிரைம் திறன்பேசிக்கு போட்டியாக லெனவோவின் கே 6 பவர் திறன்பேசி இருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் 6.0.1 வெர்ஷனுள்ள இதில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, 5.0 அங்குல முழு ஹெச்.டி திரை, உலோகத்திலான வெளிப்புற அமைப்பு, இரட்டை சிம் வசதி, குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ கோர் பிராசசர், 3 ஜிபி ராம், 32 ஜி.பி உள்ளக நினைவகம், 128 ஜிபி வரை விரிவுப்படுத்தக் கூடிய தற்காலிக நினைவகம் ஆகிய அம்சங்கள் லெனவோ கே6 பவர் போனில் உள்ளன.
இது தவிர 13 எம்.பி திறனுள்ள பின்புற கேமிரா, எல்.ஈ.டி பிளாஷ் விளக்குகள், மற்றும் 8 எம்.பி திறனுள்ள முன்புற கேமிரா ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
கைரேகை உணர்வு வசதி இந்த செல்போனின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 4ஜி ஆதரவு, வை-ஃபை, 4.2 ப்ளூடூத், எப்.எம் வானொலி, சிறிய யூ.எஸ்.பி இணைப்பு ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.
ஜியோமி ரெட்மி நோட் 4 (Xiaomi Redmi Note 4)
பொதுவாக ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களின் பெரிய பிரச்னை பேட்டரி. வெகு விரைவில் காலாவதியாகிவிடும். இந்த ஸ்மார்ட்போன் 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுவதால், பேட்டரி லைஃப் மிகவும் நீடித்திருக்கும்.
5.5 இன்ச் எச்டி அளவுள்ள ஸ்மார்ட்போன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. மேலும் 3ஜிபி ரேம் உள்ளடக்கி குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராஸஸசர் மூலம் இயக்கப்படுகிறது. பின்புற கேமரா: 13 மெகாபிக்சல், முன் கேமரா: 5 மெகாபிக்சல் மற்றும் ப்ளாஷ் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோமி ரெட்மி 4 32 ஜிபி (Xiaomi Redmi 4 32 GB)
நோட் 4-க்கு அடுத்தபடியாக இந்த ஸ்மார்ட்ஃபோன் சிறப்பானது. இதில் ஸ்னாப்ட்ராகன் 435 உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டது. இதன் செயல் திறன் மிகவும் நன்றாக இருக்கும். 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
யு யுரேகா ப்ளாக் (Yu Yureka Black)
இந்தப் புதிய மாடல் கெமிக் ஸ்னாப்டிராகன் 430 625 ப்ராஸஸசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வகையறாவில் இதுவே சிறப்பான மாடல் ஆகும். மேலும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4ஜிபி ரேம் உள்ளடிக்கியது இந்த மாடல்.
கூல் பேட் நோட் 5 (Coolpad Note 5)
இந்த மாடல் ஃபோனில் பேட்டரியின் திறன் மிக நன்றாக இருக்கும். 4010mAh பேட்டரி திறன் உடைய இந்த ஃபோனில் இரண்டு நாட்கள் வரை சார்ஜ் நீடித்திருக்கும். இந்த போனிலுள்ள கேமரா மிகச் சிறப்பாக வடிவமைக்க்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...