
ஜியோ 4ஜி போட்டியை சமாளிக்க புதிய சலுகைகள் மட்டும் போதாது, அதற்கும் மேல் ஏதாவது செய்ய வேண்டும் என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து விரைவில் வோல்ட்இ (VoLTE) சேவைகளை துவங்கவிருப்பதாக அந்நிறுவன வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வோல்ட்இ சேவையை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.
வோல்ட்இ சேவைகளை வழங்கிய முதல் நிறுவனம் எது?
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவைகளை வழங்கியவர்கள் சாட்சாத் ரிலையன்ஸ் ஜியோ தான். ஜியோ தான் இந்தச் சேவையை இந்தியர்களுக்கு வழங்கிய முதல் நிறுவனம். ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே இதுவரையில் வோல்ட்இ சேவைகலை வழங்கி வரும் நிலையில், மற்ற நிறுவனங்கள் சர்கியூட் - ஸ்விட்ச் எனும் பழைய தொழில்நுட்பத்தைதான் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தில் மொபைல் டேட்டா 4ஜி நெட்வொர்க்கில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் முதல் கட்ட பணியாக வோல்ட்இ சேவைகயை மும்பையில் தொடங்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து கொல்கத்தா, தில்லி, பங்களூரூ, சென்னை என தொடர்ந்து 2018 இறுதிக்குள் இந்த வோல்ட்இ சேவைகளை நாடு முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனையை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே துவங்கியுள்ளது.
இந்தியாவில் வோல்ட்இ தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ரிலையன்ஸ் ஜியோவால் அதிகரித்துள்ளது. காரணம் 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பங்களைவிட வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், வோல்ட்இ அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டத்தை ஜியோ அறிவித்தது. இதனால் பாதிப்படைந்த சில நிறுவனங்கள் இந்தப் போட்டியை சமாளிக்க வோல்ட்இ முக்கிய தீர்வாக இருக்கும் என முடிவு செய்து களமிறங்கியுள்ளனர். ஏர்டெல்லைத் தொடர்ந்து ஐடியாவும் இதைப் பின்பற்றப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.