சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இது வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு கசப்பான செய்தி

மாறி வரும் காலத்தின் தேவைக்கேற்ப வாட்ஸ் ஆப்பும் பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 12:04 pm IST

மாறி வரும் காலத்தின் தேவைக்கேற்ப வாட்ஸ் ஆப்பும் பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. முகநூல் நிறுவனத்திடம் உள்ள வாட்ஸ்ஆப்பில் மிக முக்கிய மாற்றம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப்பில் உள்ள சாட், வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் நவம்பர் 12, 2018-க்குப் பிறகு தாமாகவே அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக வாட்ஸ்ஆப்பில் நாம் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வீடியோ, புகைப்படங்கள், சாட்கள் அனைத்தும் நமது ஸ்மார்ட்போன் மெமரியில் சேமிக்கப்படும். அதேநேரத்தில், இந்தத் தகவல்கள் கூகுள் டிரைவிலும் (பேக்கப்) சேமிக்கப்படும். 

இந்தத் தகவல்களை கடந்த ஓராண்டுக்கு மேல் புதுப்பிக்கவில்லை என்றால், கூகுள் டிரைவில் உள்ள அனைத்து தகவல்களும் நவம்பர் 12, 2018-க்குப் பிறகு அழிக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது. இதற்காக கூகுளுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

Story image

இது வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு கசப்பான செய்தியாக இருந்தாலும், மகிழ்ச்சி தரும் மற்றோர் அம்சமும் உள்ளது. அதாவது, இனி வரும்காலங்களில் வாட்ஸ்ஆப் தகவல்களை ஸ்மார்ட்போன் மெமரியில் சேமிப்பதை விட நேரடியாக கூகுள் டிரைவிலேயே இலவசமாகச் சேமிக்கலாம் என்றும் இந்தத் தகவல்களின் அளவில் எந்தவித அளவீடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கூகுள் டிரைவில் உள்ள நீண்டநாள் வாட்ஸ்ஆப் தகவல்களைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு பயன்பாட்டில் இருக்க வேண்டும். கூகுள் டிரைவில் உள்ள தகவல்கள் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக காலியான இடம் இருக்க வேண்டும். கூகுள் பிளே, ஆன்ட்ராய்ட் பிரிவு 2.3.4 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். பின்னர், வாட்ஸ்ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் பிரிவில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப்-பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வாட்ஸ்ஆப் - ஐ ரீ-இன்ஸ்டால் செய்தால் அனைத்து பேக்கப்களும் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும். இந்த செயலின்போது Wi-Fi இணைப்பில் இருந்தால் உடனடியாகப் பதிவிறக்கம் செய்யலாம். இல்லை டேட்டாவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல், ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்வதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப், பேக்கப் டூ கூகுள் டிரைவ்-ஐ கிளிக் செய்து, பின்னர் பேக்கப் செய்வது மாதந்தோறுமா அல்லது தினந்தோறுமா என்பதைத் தேர்வு செய்தால் போதும். கூகுள் டிரைவிற்கு தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்துவிடலாம்.
- அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.