2020 உடன் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்துகிறது கூகுள்

குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக 2020-ஆம் ஆண்டு முதல் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. 
2020 உடன் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்துகிறது கூகுள்

குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக 2020-ஆம் ஆண்டு முதல் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. 9டு5 எனும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் ஹேங்கௌட்ஸ் சேவை 2020 உடன் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

கூகுள் நிறுவனம் மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏதேனும் ஒரு புதிய சேவையை துவக்கவும், பழைய சேவையை மூடப்போவதாக வதந்தி பரவிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சேட் செய்வதற்கு வசதியாக அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் சேட் செயலி மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றின் முதன்மையாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஹேங்கௌட்ஸ் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கூகுள்+ சேவையும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com