இனி யூட்யூப்பில் நீங்கள் பார்க்கும் விடியோக்களின் பட்டியலை யாரும் பார்க்க முடியாது!

இனி யூட்யூப்பில் நீங்கள் பார்க்கும் விடியோக்களின் பட்டியலை யாரும் பார்க்க முடியாது!
Updated on
2 min read

நீங்கள் இணையத்தில் எந்தத் தகவலைத் தேடினாலும் சரி, வலைத்தளங்களில் உலவினாலும் சரி, அது ப்ரெளசிங் ஹிஸ்டரியில் பதிவாகி நீங்கள் அடுத்த முறை அதை திறக்கும் போது க்ளூ கொடுக்கும். இது உங்கள் தேடுதலை எளிமையாக்கும் அதே சமயத்தில் உங்கள் கணினியில் வேலை செய்யும் மற்றவர்களுக்கும் அது தெரிய வாய்ப்புள்ளது.

குறிப்பாக யூ ட்யூப்பில் நீங்கள் இளையராஜா பாடலை 3டி சவுண்டில் கண் மூடி கேட்டு மகிழ்ந்திருக்கிறீர்கள் எனில், அடுத்த தடவை இதே வரிசையில் உங்கள் விருப்பத்துக்குரிய மற்ற இளையராஜா பாடல்கள் அணிவகுத்து நிற்கும். Recommended for you என்று அன்புடன் கட்டளையிடும். யூட்யூப் கொடுக்கும் இந்த சஜஷன்கள் சில சமயம் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால் எல்லா சமயமும் உங்களை வேவு பார்ப்பது போல யூட்யூப் உங்கள் தகவலை பதிவு செய்து வருவது சில சமயம் எரிச்சலாகவும் இருக்கலாம். 

இந்த பிரச்னையைத் தவிர்க்க யூட்யூப் நிறுவனம் தற்போது ‘இன்காக்னிட்டோ’வை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் யூட்யூப்பில் நீங்கள் பார்க்கும் விடியோக்களை ஹிஸ்டரியில் இடம் பெறாமல் செய்யலாம். நீங்கள் பார்க்கும் விடியோக்களின் விபரங்கள் குறித்து எந்த தகவல்களையும் யூட்யூபால் சேமிக்க இயலாது. 

இதைச் செயல்படுத்த கணினியில் அல்லது மொபைலில் உங்கள் யூட்யூப்பை முதலில் அப்டேட் செய்ய வேண்டும். புதிய வெர்ஷன் யூட்யூப்பில் உள்ள இந்த வசதியானது சைன் அவுட் பட்டனுக்கு அருகில் உள்ளது. உங்களுடைய பிரெளசரில் கூகுள் குரோமில் உள்ள இன்காக்னிட்டோவை ஆன் செய்வதன் மூலம், உங்களது ப்ரெளசிங் ஹிஸ்டரி பதிவாகாமல் தடுக்க முடியும்.
.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com