வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்!

மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியப்படாது. சாதாரண செல்லிடப்பேசியில் இருந்து மாற்றம் கண்டு இன்று நாம் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்!

மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியப்படாது. சாதாரண செல்லிடப்பேசியில் இருந்து மாற்றம் கண்டு இன்று நாம் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

வாட்ஸ் ஆப்பை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை முகநூல் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ் ஆப், பழைய சேவைகளை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.

2019, ஜனவரி 1-ஆம் தேதி முதல் நோக்கியா எஸ் -40 - இல் (சிம்பயான்) இயங்கி வரும் செல்லிடப்பேசிகளில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், நோக்கியா ஆஷா செல்லிடப்பேசிகளில் வாட்ஸ் ஆப் சேவையைப் பயன்படுத்த இயலாது. முன்னதாக, பிளாக்பெரி, வின்டோஸ் செல்லிடப்பேசிகளுக்கு வாட்ஸ் ஆப் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.

இதே போல், ஐஓஎஸ் 7-இல் இயங்கக் கூடிய ஐ போன் 4, 4எஸ், 5, 5 சி, 5 எஸ் ஆகிய செல்லிடப்பேசிகளுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல் ஆன்ட்ராய்டு 2.3.3 வெர்ஷன் கொண்ட செல்லிடப்பேசிகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்படும் என்பதால், அவற்றில் புதிதாக வாட்ஸ் ஆப் கணக்குகள் தொடங்கவோ, பழைய தகவல்களை மீண்டும் பயன்படுத்தவோ முடியாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு 2.3.4 வெர்ஷன், ஐஓஎஸ் 7+, வின்டோஸ் போன் 8.1+ ஆகியவை கொண்ட போன்களில் பழைய வாட்ஸ் ஆப் எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ் ஆப் கணக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 - அ. சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com