ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் ’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 8’

ஆப்பிள் வாட்ச் 8 சீரியஸின் புது அம்சமாக ரத்தத்தின் சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் சென்சார் பொருத்தப்படலாம் என டிஜிடைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் ’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 8’
ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் ’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 8’

’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 8’-ல் புது அம்சமாக ரத்தத்தின் சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் சென்சார் பொருத்தப்படலாம் என டிஜிடைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச்களின் தயாரிப்பில் தனக்கென தனி அடையாளத்துடன் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய அடுத்த தயாரிப்பான ‘வாட்ச் 8'-ல் சில புது அம்சங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.

அதில் ஒன்றாக கடிகாரத்தைக் கட்டியிருப்பவரின் ரத்தத்தின் சர்க்கரை மற்றும் குளுக்கோசின் அளவைக் கண்டறியும் சென்சார் பொருத்தப்படலாம் என டிஜிடைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக ஆப்பிள் வாட்ச் 6-ல் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு , ஈசிஜி , இதயத்துடிப்பின் அதிகரிப்பு , குறைவு ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது வாட்ச் 8 சீரியஸ் மேலும் சில சிறப்பம்சங்களுடன் தயாராக இருக்கிறது. 

சமீபத்தில் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் 7 சீரியஸ் வெளியானது.அதில்  41 எம்எம் வகை ரூ41,900-க்கும் 44 எம்எம் வகை ரூ.44,900 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இரண்டிற்கும் 10 சதவீத கேஷ்பேக் வசதி இருக்கிறது.

’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 7‘ சிறப்பம்சங்கள் : 

* துல்லியமானத் திரை 

* ரத்த ஆக்ஸிஜன் சென்சார் , ஈசிஜி , இதயத் துடிப்பின் ஏற்ற, இறக்கங்களை அறியும் சென்சார்

* தூக்கத்திலும் உடல் நிலையை அறியும் சென்சார் , தாய்ச்சி மற்றும் பிலாட்ஸ் போன்ற உடற்பயிற்சி செய்முறைகளை தெரிவிக்கும் செயலி

*வாட்டர் புரூப் ஐபி 6எக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com