ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

மே 7 நிகழ்வில் ஆப்பிளின் புதிய அறிமுகம்?
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆப்பிள் நிறுவனம் மே மாதம் 7-ம் தேதி நிகழ்வு ஒன்றை அறிவித்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் புதிய வெர்சன்கள் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு ஆப்பிள் வாடிக்கையாளர்களிடையே உருவாகியுள்ளது.

நிகழ்வு குறித்த விவரங்களை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம், மே 7-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு நிகழ்வினை ஒருங்கிணைக்கவுள்ளது.

ஐபேட் தயாரிப்பை 2010-ல் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இவற்றில் 2018-க்கு பிறகு எந்தவித புதிய அப்கிரேடும் கொடுக்கப்படவில்லை.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஐபேட் அறிமுகம், ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை வீழ்ச்சியடையும் காலத்தில் நிகழவுள்ளது. முதல் காலாண்டில் 25 சதவிகிதமளவுக்கு ஐபேட் விற்பனை சரிந்துள்ளது. ஐபோன்கள் விற்பனையும் சரிவைச் சந்தித்துள்ளது.

அழைப்பில் இடம்பெற்றுள்ள பென்சில், ஐபேட் மற்றும் அக்சஸரீஸ்களுக்கான அறிமுகத்தையே குறிப்பதாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் தயாரிப்புகள், 12.9 ஓஎல்இடி டிஸ்பிளே, எம்3 சிப், முன்பக்க கேமரா இடமாற்றம் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com