3 ஆண்டு முயற்சியை கைவிட்ட ஆப்பிள்: என்ன நடந்தது?

ஆப்பிளின் தொழில்நுட்ப சாத்தியமின்மை: விவரங்கள் இதோ.
ஆப்பிள்
ஆப்பிள்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பயன்பாடுகளை மற்ற சாதனங்களோடு இணைத்து பயன்படுத்துவது எப்போதும் இயலாத ஒன்றே. உதாரணத்துக்கு ஆப்பிளின் வாட்ச், ஆப்பிள் ஐபோன்களோடு மட்டுமே இணைத்து பயன்படுத்த இயலும்.

இதன் மூலமாக ஆப்பிள் சந்தையில் ஏகபோக உரிமையை எடுத்து கொள்வதாக நியூ ஜெர்ஸி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக ஆப்பிள் அளித்துள்ள பதிலில், தங்கள் தயாரிப்புகளை ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் இணைக்கும் வகையில் முயற்சி எடுத்ததாகவும் அது தொழில்நுட்ப சாத்தியமின்மையால் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னரே இந்த தகவல்கள் வெளிவந்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனமே இது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிப்பது இதுவே முதன்முறை.

ஆப்பிள் வாட்ச்சுகளை ஆண்ட்ராய்டு மொபைல்களுடன் இணைத்து செயலாற்ற செய்ய 3 ஆண்டுகள் ஆய்வு செய்ததாகவும் தொழில்நுட்ப சாத்தியமின்மையால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் தனது தயாரிப்புகளின் மூலமாக தனித்துவ கையாளுகையை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் கணினி, போன்கள், வாட்ச்சுகள் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து கொள்ள முடியும்.

இது ஒருவகையில் வாடிக்கையாளர்களைக் கவர்வதாக இருப்பினும் மற்ற நிறுவனங்களின் பயன்பாடுகள் வேண்டுமென்றே தவிர்க்கப்படுவது சந்தையை பாதிப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com