புதிய ஐபேட் விலை என்ன?

ஆப்பிள் ஐபேட் ஏர் மற்றும் ப்ரோ புதிய மாடல்கள் அறிமுகம்
ஆப்பிளின் விடியோ அறிமுகத்தில்..
ஆப்பிளின் விடியோ அறிமுகத்தில்..யூ-டியூப்

ஸ்மார்ட் கருவிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தாண்டின் முதல் அறிமுக நிகழ்வை செவ்வாய்க்கிழமை இணையத்தில் நிகழ்த்தியுள்ளது.

‘லெட் லூஸ்’ (தளர விடுங்கள்) என தலைப்பிடப்பட்ட இந்த நிகழ்வில் ஐபேட் டேப்கள் அவற்றுக்கான கீ போர்ட், பென்சில் ஆகியவற்றின் அப்டேடட் மாடல்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபேட் ஏர்
ஐபேட் ஏர்யூ-டியூப்

ஐபேட் ஏர்

ஐபேட் ஏர் மாடல், ஐபேட் ப்ரோ போலவே, 11 இன்ச் மட்டும் 13 இன்ச் திரை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.

பலரும் எதிர்பார்த்தது போலவே ஐபேட் ஏர் மாடலின் செல்பி கேமரா, பக்கவாட்டில் (லேண்ட்ஸ்கேப் பக்கத்தில்) மாற்றப்பட்டுள்ளது.

எம்2 இயங்குபொறி பொருத்தப்பட்டுள்ளது. ஐபேட் ஏர் சேகரிப்புத்திறன் 128ஜிபி, 256ஜிபிக்கு அடுத்து 512 ஜிபி மற்றும் 1 டிபி அளவுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

நான்கு வண்ணங்களில் அறிமுகமாகிற ஐபேட் ஏர் ஆரம்ப விலை இந்திய மதிப்பில்:

-11 இன்ச் ஐபேட் ஏர் ரூ.59,900/- (வை-பை மாடல்)

-11 இன்ச் ஐபேட் ஏர் ரூ.74,900/- (வை-பை மற்றும் செல்லுலார்)

-13 இன்ச் ஐபேட் ஏர் ரூ.79,900/- (வை-பை மாடல்)

-13 இன்ச் ஐபேட் ஏர் ரூ.94,900/- (வை-பை மற்றும் செல்லுலார்)

ஐபேட் ப்ரோ

முன்னர் இருந்த ப்ரோ மாடலின் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் திரை அளவுகளே இருந்தாலும் புதிதாக ஓலெட் என்கிற திரை வடிவை அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஆப்பிள்.

எப்போதையும் விட தடிமன் குறைவானதாகவும் எடை குறைவானதாகவும் ஐபேட்டின் இந்த ப்ரோ மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபேட் சேகரிப்புத்திறன் 2 டிபி அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் எம்4 இயங்குபொறி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐபேட் ப்ரோ அறிமுகம்
ஐபேட் ப்ரோ அறிமுகம்யூ-டியூப்

வெள்ளி மற்றும் கருப்பு நிறங்களில் ஐபேட் ப்ரோ கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில்:

-11 இன்ச் ஐபேட் ப்ரோ ரூ.99,900/- (வை-பை மாடல்)

-11 இன்ச் ஐபேட் ப்ரோ ரூ.1,19,900/- (வை-பை மற்றும் செல்லுலார்)

-13 இன்ச் ஐபேட் ப்ரோ ரூ.1,29,900/- (வை-பை மாடல்)

-13 இன்ச் ஐபேட் ப்ரோ ரூ.1,49,900/- (வை-பை மற்றும் செல்லுலார்)

மேலும், ஐபேட்டுக்கு பயன்படுத்தும் மேஜிக் கீபோர்டு மற்றும் பென்சிலில் சிறிய அப்டேட்களை ஆப்பிள் கொடுத்துள்ளது.

இந்த ஐபேட்கள் விற்பனை அமெரிக்காவில் இணையத்தில் இன்றே தொடங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com