திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 
கரைப்புதூர் ஊராட்சி பள்ளியில் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த பெண்கள்
கரைப்புதூர் ஊராட்சி பள்ளியில் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த பெண்கள்

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 999 பதவிகளுக்கு 3,088 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 396, ஊத்துக்குளியில் 445, காங்கயத்தில் 218, பல்லடம் 590, வெள்ளகோவில் 161, மூலனூர் 189 மற்றும் தாராபுரம் 294 என மொத்தம் 2,293 பேர் போட்டியிடுகின்றனர். 

இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 247 பேர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64, ஊத்துக்குளியில் 136, காங்கயத்தில் 44, பல்லடம் 79, வெள்ளகோவில் 18, மூலனூர் 50 மற்றும் தாராபுரம் 54 என மொத்தம் 445 வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர். இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 பேர். 

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38, ஊத்துக்குளியில் 65, காங்கயம் 48, பல்லடம் 49, வெள்ளகோவில் 24, மூலனூர் 51 மற்றும் தாராபுரம் 41 என 312 பேர் போட்டியிடுகின்றனர்.  

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் அரசு பள்ளியில் நீண்ட கியூ வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தேர்தல் பிரிவினர் வழங்கி உள்ள பூத் சிலிப் தொடங்கி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உட்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் சென்று வாக்களிக்கலாம். கிராமப்புற மக்கள் இன்றைக்கு 4 வாக்குகள், அதாவது ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை , ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நீலம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் என நான்கு வண்ண வாக்குச்சீட்டுகளில் வாக்கு செலுத்துகிறார்கள். 

திருப்பூர் குன்னாங்கள்பாலையத்தில் உள்ள வாக்கு சாவடியில் பல்லடம் எம்எல்ஏ கரைப்புத்தூர் நடராஜன் தனது வாக்கினை முதல் ஆளாகச் சென்று பதிவு செய்தார். மேலும் ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com