தூத்துக்குடி மாவட்டத்தில் 824 வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில்  முதல்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 824 வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

8 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 48 பேரும், 88 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 430 பேரும், 156 ஊராட்சி தலைவர் பதவிக்கு 687 பேரும், 874 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,396 பேரும் என மொத்தம் 1,126 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 561 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில் முதல்கட்டமாக 824 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 162 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஏறத்தாழ 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 185 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 4 ஆயிரத்து 256 பெண் வாக்காளர்கள், 25 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com