பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் வாக்குப்பதிவு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை துவங்கியது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் வாக்குப்பதிவு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகங்களில் இருந்து ஓட்டுப் பெட்டிகள் மற்றும் பேனா, பென்சில், மை, அட்டைப்பெட்டி உள்ளிட்ட 72 பொருட்கள் அடங்கிய சாக்குப்பைகளும் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வியாழக்கிழமை எடுத்துச்செல்லப்பட்டது. ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளும், 105 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 502 போட்டியிடுகின்றனர். 

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளில் 129 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் அனைத்து பதவிகளுக்கும் சேர்த்து 603 பேர் போட்டியிடுகின்றனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 183 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் அனைத்து பதவிகளுக்கு 858 பேர் போட்டியிடுகின்றனர்.

கிணத்துக்கடவில் 34 ஊராட்சிகளில் 151 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில் அனைத்து பதவிகளுக்கு சேர்த்து 694 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கத் துவங்கினர். சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த ஊரான ரமணமுதலிபுதூரில் வரிசையில் நின்று வாக்களித்தார். முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தனது சொந்த ஊரான நல்லிக்கவுண்டன்பாளையத்தில் வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com