ராமநாதபுரத்தில் அதிகாரிகள் குளறுபடியால் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் அதிகாரிகள் குளறுபடியால் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்  திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட புது மாயாகுளம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் அதிகாரிகளின் குளறுபடியான நடவடிக்கையால் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட புது மாயாகுளம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் அதிகாரிகளின் குளறுபடியான நடவடிக்கையால் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் 5 ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த நிலையில், திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் 103 வார்டு பகுதி மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடியில் ஊராட்சி தலைவருக்கான பெயர் சின்னங்கள் மட்டும் இருப்பதாகவும், வார்டு உறுப்பினர்களின் பெயர் சின்னம் இல்லை என்றும், மாயாகுளம் ஊராட்சியின் பெயர் வாக்குச்சாவடிகளில் இல்லை என்று கூறிய வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாயாகுளம் 103-ஆவது வாக்குச்சாவடியில் 6 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தகவலறிந்த கீழக்கரை டிஎஸ்பி முருகேசன், வளர்ச்சி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com