கோப்புப் படம்
கோப்புப் படம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வெற்றி நிலவரம் உடனுக்குடன்!

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

வெற்றி நிலவரம் உடனுக்குடன்..

திருவாரூர் மாவட்டம்

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 18

தேர்தல் நடைபெற்றது 17 இடங்கள்

அதிமுக-3

திமுக-10

சிபிஎம்-1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-3

நாகை மாவட்ட வாக்கு எண்ணிக்கை முடிவு

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மொத்தம் 21 இடங்கள்

திமுக - 14 வெற்றி 

அதிமுக - 5 வெற்றி

சிபிஐ - 1

பாஜக - 1

வெற்றி பெற்றவர்களின் விவரம் (வார்டு எண் -  உறுப்பினர் பெயர்- கட்சி) : 

வார்டு எண் 1 - ப. விஜயபாரதி (திமுக), வார்டு எண் 2 - ஆர். சுமதி (அதிமுக), வார்டு எண் 3  க. ஆனந்தன் (திமுக), வார்டு எண் 4 - டி. விஜேஸ்வரன் (திமுக), வார்டு எண் 5 - ந. இளையபெருமாள் (திமுக), வார்டு எண் 6 - க. சுரேஷ் (திமுக), வார்டு எண் 7 - சி. குமாரசாமி (திமுக).

வார்டு எண் 8 - தெ. வெண்ணிலா (திமுக),  வார்டு எண் 9 - ர. துளசிரேகா (திமுக), வார்டு எண் 10 - அ. ராபியா நர்கீஸ்பானு (திமுக), வார்டு எண் 11- உமாமகேஸ்வரி (திமுக), வார்டு எண் 12 - விஜயா ராஜேந்திரன் (திமுக), வார்டு எண் 13 - ரா. அஜீதா (திமுக), வார்டு எண் 14 - வீ. சரபோஜி (இந்திய கம்யூ). 

வார்டு எண் 15 - எஸ். கணேசன் (அதிமுக), வார்டு எண் 16- பி. செல்வி (திமுக), வார்டு எண் 17 - இ. கௌசல்யா (திமுக), வார்டு எண் 18 - த. இளவரசி (அதிமுக), வார்டு எண் 19 - வி. சோழன் (பாஜக), வார்டு எண் 20 - டி.வி. சுப்பையன் (அதிமுக), வார்டு எண் 21 - திலீபன் (அதிமுக).

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மொத்தம் 214 இடங்கள்

அதிமுக  70 வெற்றி 

திமுக 108 வெற்றி 

சிபிஐ 2 வெற்றி

சிபிஎம்  1 வெற்றி

தேமுதிக 1 வெற்றி

காங்கிரஸ் 1 வெற்றி

பிஜேபி 8 வெற்றி

பாமக 3 வெற்றி

அமமுக 2 வெற்றி

சுயேட்சை 18 வெற்றி

திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது
திருப்பூரில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 13 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலமாக மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
 

மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, தே. கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,  திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, சேடப்பட்டி ஆகிய ஒன்றியங்களை திமுகவும் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அலங்காநல்லூர், மேலூர், உசிலம்பட்டி, மதுரை மேற்கு ஆகிய ஒன்றியங்களில் அதிமுக , திமுக இடையே இழுபறி நிலை  உருவாகியுள்ளது.

இந்த நான்கு ஒன்றியங்களிலும் அமமுக,  சுயேச்சை உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி அமைந்திருக்கிறது.

மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் உள்ள 23 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளதால் எளிதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக பெறுவது உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவியிடங்கள் மொத்தம் 18 உள்ளன. இதில் இதுவரை 12-இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக-3
திமுக-5
பாமக-3
தேமுதிக-1

ஊராட்சி ஒன்றியங்கள்-10
மொத்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள்-188
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை-166

வெற்றி விவரம்:
அதிமுக-59
திமுக-44
தேமுதிக-7
மற்றவை-53 (பாமக உள்பட)

ஒன்றியம் வாரியாக
அரூர்

அதிமுக-11
திமுக-5
தேமுதிக-2
மற்றவை-5

கடத்தூர்
அதிமுக-3
திமுக-3
தேமுதிக-1
மற்றவை-6

காரிமங்கலம்

அதிமுக-12
திமுக-6
தேமுதிக-1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-1
மற்றவை-1

தருமபுரி

அதிமுக-9
திமுக-4
தேமுதிக-1
மற்றவை-10

நல்லம் பள்ளி

அதிமுக-6
திமுக-5
மற்றவை-17
தேமுதிக-1

பாப்பிரெட்டிப்பட்டி

அதிமுக-1
திமுக-7
மற்றவை-6

பாலக்கோடு

அதிமுக-10
திமுக-9
தேமுதிக-1
மற்றவை-3

பென்னாகரம்

அதிமுக-7
திமுக-5
மார்க்சிஸ்ட்-2
மற்றவை-5

ஏரியூர் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளவற்றில், அரூர், கடத்தூர், காரிமங்கலம், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள்: 

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மொத்தம் 161:
இறுதி நிலவரம்

அதிமுக−59,
திமுக−62,
காங்கிரஸ்−13,
தேமுதிக−3,
பாஜக−2,
சிபிஐ-1,
மற்றவை−21(அமமுக உள்பட)

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி: அதிமுக கூட்டணி 8; திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும்,திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்பட சுயேட்சை வேட்பாளர் என 75 பேர் போட்டியிட்டனர்.

இதையடுத்து,பதிவான வாக்குகள் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்திலிருந்து அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தன. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 1 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ம.பாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று, 2 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் அ.மதிவாணன், 3-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ரெ.ரவி, 4-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் லெ.மஞ்சரி, 5 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பா.ராதா, 6-ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரெ.சுந்தரராஜன், 7 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பா.செந்தில்குமார், 8 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அ.சரஸ்வதி, 9 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் செ.ஸ்டெல்லா, 10 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் கோமதி, 12 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் பாக்கியலெட்சுமி, 13 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் மு.கருப்பையா, 14 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அ.சொ.மாரிமுத்து, 15 ஆவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரோக்கிய சாந்தாராணி, 16 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் செ.மகேஸ்வரி வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து,மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக கூட்டணி 8 இடங்களிலும்,திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்று சமநிலையை பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் மத்தூர், தளி ஆகியவற்றில் திமுகவும் கெலமங்கலத்தில் சிபிஐஎம், ஓசூர், சூளகிரி ஆகியவற்றில் அதிமுகவும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு திமுக, அதிமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நாகை ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. 3 ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை முடிவும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வெற்றி முடிவும் பகல் 1.15 மணி வரை வெளியாகவில்லை. தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி 3வது வார்டுக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தை கைப்பற்றியது திமுக

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும், 3 ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுகவும் அதிமுகவும் சம பலமாக உள்ளதால் இழுபறி நீடிக்கும் என கூறப்படுகிறது.  

திருச்சியை அள்ளியது திமுக!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. 2 இடங்களில் இழுபறி.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 24 இடங்களில் திமுக 18, அதிமுக 5, காங்கிரஸ் 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 12 ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் அதன் துணைத் தலைவர் பதவிகளுக்கு திமுக-வுக்கே பெரும்பான்மை உள்ளது.

நாமக்கல் மாவட்டம்: கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் சேளூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது இளம்பெண் ரோகினி 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நேர்ல கிரி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம்: 13 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவுகள்

மொத்தம் உள்ள 214 வார்டுகளில் திமுக 92, அதிமுக 87, காங்கிரஸ் 5, பாஜக 2, தேமுதிக 3, அமமுக 7, தமாகா1, சுயேச்சை 17 இடங்களில் வெற்றி.

மதுரை மாவட்ட ஊராட்சி வார்டு: 23 வார்டுகளில் 12 இல் திமுக, 9 இல் அதிமுக, தேமுதிக 1, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது

திண்டுக்கல்: நத்தம், வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது. வத்தலகுண்டு, கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ஆத்தூர், திண்டுக்கல், பழனி ஆகிய 8 ஒன்றியங்களில் திமுக வெற்றி. சாணார்பட்டியில் இழுபறி நீடிப்பு.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 23 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளில் 17 இடங்களில் திமுக வெற்றி. 6 இடங்களில் அதிமுக வெற்றி.

வேதாரண்யம்: நாகை மாவட்டம் ஊராட்சி உறுப்பினர்:
19 -வது வார்டு சோழன் பாஜக 
20 - வது வார்டு சுப்பையன் அதிமுக
21 வது வார்டு திலிபன் அதிமுக

சாத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக 5 இடம், திமுக 8 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

***
சூலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 

அதிமுக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 1 இடத்தில்முன்னிலை பெற்றுள்ளது.

ஒன்றிய கவுன்சிலர்(14): அதிமுக 3 , திமுக 1,  சுயச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

***

சுல்தான்பேட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அதிமுக - 1
ஒன்றிய கவுன்சிலர்(13): அதிமுக 2, திமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

***
விருதுநகர் மாவட்டம்உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: சாத்தூர் 
ஒன்றிய கவுன்சிலர்: 16 இடங்களில், அதிமுக 5, திமுக 8, மதிமுக 2, பாஜக 1இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

***
விருதுநகர் மாவட்டம் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: வெம்பக்கோட்டை
ஒன்றிய கவுன்சிலர் - 20 வார்டுகளில் அதிமுக வெற்றி

***

உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் வார்டு முடிவுகள்: 
மொத்தம் - 10
அதிமுக - 7
திமுக -2
அமமுக - 1
யூனியன் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

வாக்குப்பெட்டிகளைக் காணவில்லை!

நீலகிரி மாவட்டத்தில் பாலகொலா ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் சித்ரா, 3 வாக்குப்பெட்டிகளைக் காணவில்லை என தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

---

குமரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 

---

குலுக்கல் முறையில் தேர்வு!

தஞ்சாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இருவர் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

---

மதுரை ஊராட்சி ஒன்றிய வார்டு: மாலை 6 மணி நிலவரம்

54 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிப்பு:

திமுக - 25
அதிமுக - 22
சுயேச்சை - 4
பாஜக - 1
தேமுதிக - 1
காங்கிரஸ் - 1

---

4 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளரை வென்ற சுயேச்சை:

சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வேடியப்பன், பாமக வேட்பாளர் முனுசாமியை விட 4 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி:

3-வது வார்டில் அதிமுக வெற்றி. அதிமுகவைச் சேர்ந்த சசிகலா, திமுக வேட்பாளர் பாலமணியை விட 2619 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் கருவேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார்.

வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டவை:

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் கணவன், மனைவி வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். 

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன. இதில் குலசேகரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக பிரமுகரான சுடலையாண்டி 838 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேட்சை வேட்பாளர் மாணிக்க செல்வகுமாரை விட 423 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். 

இந்நிலையில் குலசேகரபுரம், வடக்குத் தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுடலையாண்டியின் மனைவியான சண்முகவடிவு அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். 

ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பட்டியல்!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 241 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள 22 இடங்களில் 13 இடங்களில் திமுக-வும், 5 இடங்களில் அதிமுக-வும், காங்கிரஸ் ஓரிடத்திலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 24 மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் ஒரு இடங்களுக்கு கூட மாலை 6 மணி வரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள  183 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகளில் இதுவரை 43 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக 28, திமுக 14, சுயேட்சை 1 வார்டில் வெற்றிபெற்றுள்ளனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்;
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் திமுக சார்பில் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தேனி மாவட்டம் : போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் 1-வது வார்டு தேர்தலில்  5 - வது சுற்று முடிவில் அதிமுக பிரிதா - 7420 திமுக உமா தேவி 6558. அதிமுக முன்னிலை.

புதுக்கோட்டையில்  இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 11 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ( மொத்தம் 225) பதவி இடங்களுக்கான முடிவுகளில் ஓர் இடத்தை அதிமுகவும், 7 இடங்களை திமுகவும் 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. 

மாவட்ட ஊராட்சிக் குழுவில் 22 வார்டு உறுப்பினர் பதவி இடங்களில் இதுவரை எதற்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறவில்லை.

வாக்குச்சீட்டுகளை வண்ணப்படி பிரிக்கும் பணியே தொடக்கத்தில் சுமார் ஒன்னரை மணி நேரத்தைக் கடத்திவிட்டது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் இரு வாக்குப் பிரிப்பு அறைகளும் சுமார் 8 வாக்கு எண்ணும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

***

கொடைக்கான‌ல் ஒன்றிய‌த்தில் உள்ள‌ 12 வார்டுக‌ளில், திமுக‌ 5 வார்டுக‌ளையும், அதிமுக‌ 1 வார்டையும், சுயேச்சை 1 வார்டையும் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌ர்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  22வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட  அதிமுகவைச் சேர்ந்த ராஜா வெற்றி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 276 ஒன்றிய குழு வார்டுகளில் இதுவரை திமுகவை 13 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் தமாகா, அமமுக, சுயேச்சை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், அதிமுகவை சேர்ந்த ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

குலுக்கல் முறையில் தேர்வு

அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்னஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட் அங்கப்பன் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.  இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சாத்தூர் - விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 1 2 3 4 5 6 வார்டுகளில் அதிமுக வெற்றி.

ஒன்றிய கவுன்சிலர் வார்டு: 10 - திமுக வெற்றி

மதுரை மாவட்டம்: அரிட்டாபட்டி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ள 79 வயது பாட்டி அ.வீரம்மாள்.  ஏற்கெனவே இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஊராட்சித் தலைவராக 193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்: சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டிநாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி தலைவராக ஜெ.சந்தியா ராணி (21) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிபிஏ இறுதி ஆண்டு மாணவி.

திருச்சி மாவட்டம்: ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளில் அதிகாரப் பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட 11 இடங்களில் 7இல் திமுக வெற்றி. 3இல் அதிமுக வெற்றி, ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் 3,4 வாராடு ஒன்றிய கவுன்சிலர் முடிவு

3வது வார்டு

கஸ்தூரி - அதிமுக - 890

விஜயலெட்சுமி - மதிமுக -633

அதிமுக வெற்றி


4வது வார்டு

நிர்மலா - தேமுதிக (அதிமுக கூட்டணி) 1240

மாரியம்மாள் - மதிமுக - 1169

தேமுதிக வெற்றி

***

தேனி மாவட்டம்: போடி ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் 1-வது வார்டு தேர்தலில்  மூன்றாவது சுற்று முடிவில் அதிமுக பிரிதா - 3906, திமுக உமா தேவி 3850. அதிமுக முன்னிலை.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு 3 வது வார்டு உறுப்பினராக செல்வி (திமுக) வெற்றி.

***

உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் வார்டு முடிவுகள்: .
மொத்தம் - 10
அ.தி.மு.க = 7
தி.மு.க-2
அ.ம.மு.க = 1
யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியது.

***

ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுவிதா 103 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

***

தூத்துக்குடி மாவட்டம் : கயத்தார் ஒன்றியம் 4,5 வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவு

4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்

ஜெயச்சந்திரன் - மதிமுக -1459

தியாகராஜன் - அதிமுக- 968

மதிமுக வேட்பாளர் வெற்றி

5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்

மனோராஜா - சுயே(அமமுக) - 2046

அழகிரி சாமி - அதிமுக - 1139

சுயேச்சை (அமமுக) வேட்பாளர் வெற்றி

***

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவராக லிங்கேஸ்வரி, ஆவல்நத்தம் பஞ்சாயத்து தலைவராக காளியம்மா, இனாம் மணியாச்சி பஞ்சாயத்து தலைவராக ஜெயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்: திருவையாறு ஒன்றியத்தில் 3-வது வார்டில் தேமுதிகவும் 4 மற்றும் 5-வது வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றன.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்

ஒன்றிய வார்டு உறுப்பினர்

2 வது வார்டு - அதிமுக வெற்றி
புஷ்பராணி -திமுக -1801
மணிமலா -அதிமுக -1862
மீனா -அமமுக-147
வெள்ளைஅம்மாள்-நாம் தமிழர்-178

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்

 
ஒன்றிய வார்டு உறுப்பினர்

1வது வார்டு-திமுக வெற்றி.

அழகு பொன்னு-திமுக-2508
மீனா-அதிமுக-1729
தனம்-அமமுக 456

சுல்தான் பேட்டை :

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சாபாளையம்  பஞ்சாயத்து தலைவர் திமுகவை சேர்ந்த சாரதாமணி காளிமுத்து வெற்றி அறிவிப்பு. அவர் பெற்ற ஓட்டுகள் 1202.

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செலக்கரிச்சல் பஞ்சாயத்து தலைவராக மரகத வடிவு கருப்புசாமி(அதிமுக) அவர்கள் தேர்வு. அவர் பெற்ற ஓட்டுகள் 2286.

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் சுயேச்சை வேட்பாளர் கணேசன் வெற்றி. அவர் பெற்ற ஓட்டுகள் 893.

தருமபுரி மாவட்டம்

10-ஆவது வார்டு
ஏரியூர் ஒன்றியத்தில் பதிவான தபால் ஓட்டுகள் 135. இதில் 85தபால் ஒட்டுகள் செல்லாதவை.
பென்னாகரத்தில் 415 தபால் ஓட்டுகளில் 265 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில் 150 ஓட்டுகள் செல்லாதவை.
பிக்கிலி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராதிகா 2567 வாக்குகள் பெற்று வெற்றி .

தருமபுரி: தருமபுரி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுகவை சேர்ந்த இருசன் வெற்றி பெற்றார்.

தருமபுரி ஒன்றிய கவுன்சிலர் வார்டு 1. புஷ்பா சிவக்குமார் வெற்றி (பாமக)

தருமபுரி ஒன்றியம் 3வார்டு தம்பி ஜெய்சங்கர் வெற்றி (தேமுதிக)

தருமபுரி ஊராட்சி கவுன்சிலர். கந்தமாள்வடிவேல்  வெற்றி (பாமக)

தஞ்சாவூர் மாவட்டம் : அம்மாபேட்டை ஒன்றியத்தில் முதலாவது வார்டில் திமுக வேட்பாளர் செல்வம், இரண்டாவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபாரதி வெற்றி பெற்றனர்.

திருவாரூர் : பள்ளிவாரமங்கலம் ஊராட்சித் தலைவராக கலைச்செல்வி தேர்வு. 

ஒன்றியக்குழு கவுன்சிலர் தேர்தலில்  வார்டு 1- முருகேசன், வார்டு 4- பத்மப்பிரியா, வார்டு 6- வாசுகி ஆகியோர் வெற்றி பெற்றதாகத் தகவல். அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.

தேனி மாவட்டம்: தேனி ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது வார்டு(ஊஞ்சாம்பட்டி) உறுப்பினர் பதவி- பிரகாஷ்(அதிமுக) வெற்றி.

ஆண்டிபட்டி ஒன்றியக்குழு  3- வது வார்டுக்கு அதிமுக வேட்பாளர் ஏ.லோகிராஜன் வெற்றி. 4-வது வார்டுக்கு அதிமுக வேட்பாளர் வரதராஜன் வெற்றி.

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு 1-வது உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் சி.ஜெயந்தி வெற்றி.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு 7 - வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் ராஜாராமன் வெற்றி.

விருதுநகர் ஒன்றியம் : விருதுநகர் ஒன்றிய 1 வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி. அதேபோல் இரண்டாவது வார்டு ஏழாவது வார்டில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

குமரி மாவட்டம்: ராஜாக்காமஞ்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட  புத்தேரி ஊராட்சி தலைவராக கண்ணன் தேர்வு கண்ணன் வாங்கிய வாக்குகள் 1418. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யப்பன் 1018. வாக்குகள் பெற்றார்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினராக கணேசன் இரண்டாவது வார்டில் ராஜதுரை ஆகியோர் வெற்றி. இருவரும் சுயச்சை என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் எஸ்.சி.சகுந்தலா வெற்றி.

மொத்த வாக்குகள்-1,727, பதிவானவை-1,365, எஸ்.சி.சகுந்தலா - 676, பூமணி-653.

பட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெற்றி, மொத்த வாக்குகள்-908, சரவணன்-376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தேனி மாவட்டம்: பெரியகுளம் ஒன்றியம், கீழவடகரை ஊராட்சி மன்றத் தலைவராக செ.செல்வராணி வெற்றி பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம்: கம்பம் ஒன்றியம், ஆங்கூர்பாளையம் ஊராட்சித் தலைவராக பி.சாந்தி தேர்வு.

கன்னியாகுமரி: மேல்புறம் ஒன்றியம் வார்டு உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசவுந்தரி, 181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

திண்டுக்கல் மாவட்டம்: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 ஒன்றியத்தில் உறுப்பினர்களில் 3 இடங்களில் திமுக வெற்றி. ஒரு சுயேச்சை வெற்றி.

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தின் முதல் ஊராட்சியான எகுமதுரை ஊராட்சி தலைவராக ஸ்ரீபிரியா மகேந்திரன் வெற்றி.

 கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் முடிவாக எகுமதுரை ஊராட்சி தலைவராக ஸ்ரீபிரியா மகேந்திரன் 400வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் முதல் ஊராட்சி என்ற பெருமைக்குரிய எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஸ்ரீபிரியா மகேந்திரன் மற்றும் சுபா போட்டியிட்ட நிலையில் ஸ்ரீபிரியா மகேந்திரனுக்கு முதல் சுற்றில் 141 ஓட்டும், சுபாவிற்கு 22 ஓட்டும், இரண்டாவது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 328 ஓட்டும், சுபா 87 ஓட்டும், மூன்றாவது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 149ஓட்டும், சுபா 161 ஓட்டும் ,4வது சுற்றில் ஸ்ரீபிரியா மகேந்திரன் 109 ஓட்டும், சுபா 51 ஓட்டும் பெற்றனர்.

இதன் மூலம் ஸ்ரீபிரியா மகேந்திரன் மொத்தம் 725 ஓட்டுகளும்,சுபா 321 ஓட்டுகளும் பெற்ற நிலையில், ஸ்ரீபிரியா மகேந்திரன்  404ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீபிரியா மகேந்திரன் தமிழகத்தின் முதல் ஊராட்சியான எகுமதுரை ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு பெற்றார். 

அதே போல 2வது வார்டிற்கு சசிகலா சுரேஷ்குமார், 3வது வார்டில் விஷ்ணுகுமார் வெற்றி பெற்றனர்.

தேனி மாவட்டம்:

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு, 1- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அமமுக வேட்பாளர் மருதையம்மாள் வெற்றி.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முடிவு: 

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பரமேஸ்வரி வெற்றி பெற்றார்.


அம்பலத்தாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வீர மணிகண்டன், தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வி. டி.பாலு, சிறுவாலை  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டியம்மாள்,  தோடனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெய்சங்கர், வைரவநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கீதா மருதுபாண்டி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார். 

இதேபோன்று மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆக அதிமுக முருகேசன் தேர்வு பெற்றுள்ளார். 

***

தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு, 1- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட  அமமுக வேட்பாளர் மருதையம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.  க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு,1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சந்திரா வெற்றி பெற்றுள்ளார். 
இதேபோன்று பெரியகுளம் ஒன்றியம், E.புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னப்பாண்டி வெற்றி பெற்றுள்ளார். 

***

நாகை:  நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் திருமேனி,  ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட இந்திரா அருள்மணி,  அதிமுக வேட்பாளர் ஜெயந்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

***
திண்டுக்கல் மாவட்டம்:  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்தில் தற்போது வரை வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விபரம்.
சிரங்காட்டுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட செல்விவீரன், குடகிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு உருளை சின்னத்தில் போட்டியிட்ட ராஜேஸ்வரி அழகர்சாமி,  கோசுகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஷாஜிதாபேகம்,  பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேன்மொழி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

***

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பரமேஸ்வரி 816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக 2620 வாக்குகளும், அதிமுக 1804  வாக்குகளும் பெற்றுள்ளது. 

***

தேனி மாவட்டம்: க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு,1-வது வார்டு உறுப்பினர் தேர்தல்- அதிமுக வேட்பாளர் சந்திரா வெற்றி.

***

சிவகங்கை:
சாக்கோட்டை ஒன்றியத்தில்  சொக்கலிங்கபுதூர் ஊராட்சி மன்றத் தலைவராக பெருமாள் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் இரண்டாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆக அதிமுக முருகேசன் வெற்றி.
 

***

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போடுவாா்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி  80 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சித் தலைவராக ஜென்ஸிராணி வெற்றி
 

***

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில்  மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக முன்னிலை.

எல்லாபுரம் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் எல்லாபுரம் 1வது வார்டு அதிமுக வெற்றி.

***

தேனி மாவட்டம்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், பொட்டிபுரம் ஊராட்சி தலைவர் செல்வராஜ் வெற்றி

சேலம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்:  ஓமலூரில் 8 வது வார்டு மற்றும் கொளத்தூர் 1 ஆவது வார்டில் அதிமுக முன்னிலை
 

***

சேலம்: ஏற்காடு ஊராட்சி  ஒன்றியத்தில் நாகலூர் ஊராட்சி மன்றத் தலைவராக கண்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். குப்புசாமி, பாலகிருஷ்ணன், பேபி, வெண்ணிலா, சீனிவாசன், சிவகாமி, பாப்பாத்தி, ஜோதி, அல்லிமுத்து ஆகிய 9 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

***

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றிய 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனியம்மாள் வெற்றி.

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் முடிவுகளை அறிவிப்பது தாமதம் ஆகி வருகிறது. தோட நேரி, வைரவநத்தம், சமயநல்லூர் ஆகிய ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டும் வெற்றி பெற்றது யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஆகிவருகிறது.

***

தேனி மாவட்டம்:

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சி வார்டு எண்: 1 தங்கப்பாண்டி. 2 லதா பாண்டி, 3  மகாதேவி, 4 ஜெயராணி, 5 ஹரியம்மாள், 6 துரைபாண்டி, 7 செல்வராணி, 8 ராஜேஸ்வரி, 9 மகாலட்சுமி ஆகியோர் வெற்றி.

தலைவர் பதவிக்கு தங்கப்பாண்டி ஏற்கனவே போட்டியின்றி தேர்வு.
 

***

கொடைக்கானல் கூக்கால்  ஊராட்சி ஒன்றியம் வார்டு1: ஒன்றிய கவுன்சிலர்:


அதிமுக -1210
திமுக -1483
மொத்த வாக்குகள் - 3109
273 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி.
 

***

காரமடை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஓடந்துறை ஊராட்சி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்: தங்கவேல் - 1409 (வெற்றி)

வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்கள்: 
1: ஜானகி---120
2: தேவி---110
3: ரேவதி---114
4:வடிவேல்---111
5:உமர்பாரூக்
6: நீலாவதி---207
7: வெள்ளிங்கிரி---112
8: விஜயலட்சுமி---128
9:முருகையன்
 

***

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவார்பட்டி ஊராட்சியில் பாண்டி என்பவர் வெற்றி பெற்றார்.

மதுரை கிழக்கு ஒன்றியம் சின்னமாங்குளம் ஊராட்சித் தலைவராக வி.வெள்ளைச்சாமி வெற்றி.

பொய்கைகரைப்பட்டி ஊராட்சித் தலைவராக லெட்சுமி வெற்றி.

திருசெண்ணம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வடிவழகன் வெற்றி.

***

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டில் திமுக வேட்பாளர் சோபனா ராஜி வெற்றி.
 

***

கொடைக்கானல் கூக்கால் ஊராட்சி தலைவர் தேர்தலில் வளர்மதி மாயன் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் 9வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார்.

மிதிலைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சிங்காரம் வெற்றி பெற்றார்.
 

***

தேனி மாவட்டம்:

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு, 1வது வார்டு உறுப்பினர் (பொட்டிபுரம்) மொத்த வாக்கு 3,461. 

தி.மு.க. - 1,725 (வெற்றி)

அ.இ.அ.தி.மு.க - 1,572

அ.ம.மு.க. - 59

செல்லாதவை - 105

***

காரமடை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் ஓடந்துறை ஊராட்சி தேர்தல் வெற்றி விபரம்:


தலைவர் பதவிக்கு:

திமுக: தங்கவேல்---1409 (வெற்றி)

அதிமுக: சண்முகம்---1356
 

சுயேச்சைகள்: 
ராதாகிருஷ்ணன் --45
பாலு----159

வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்கள்: 
 

1: ஜானகி---120 (அதிமுக_
2: தேவி---110 (திமுக)
3: ரேவதி---114 (அதிமுக)
4:வடிவேல்---111(அதிமுக)
5:உமர்பாரூக் (திமுக)
6: நீலாவதி---207 (அதிமுக)
7: வெள்ளிங்கிரி---112 (அதிமுக)
8: விஜயலட்சுமி---128 (அதிமுக)
9:முருகையன்--- (திமுக)
 

***

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு முதலாவது வார்டில் திமுக வெற்றி.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த விஜயன் 1048 வாக்கு பெற்று 22 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

***

சுல்தான்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2 ஆவது வார்டு உறுப்பினராக சுயேச்சை வேட்பாளர் மனோகரன் வெற்றி.

ஒன்றாவது வார்டு உறுப்பினராக தி. மு.க. வேட்பாளர் விஜயகுமார் வெற்றி.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டில் திமுக வேட்பாளர் சீத்தப்பன் வெற்றி.

***

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர்  ஊராட்சி ஒன்றியம்

கொட்டகுடி - கிராம ஊராட்சி
தலைவர் - ராஜேந்திரன்
வார்டு உறுப்பினர்கள்
தாஸ் 1, சிவனாண்டி 2, மாரியம்மாள் 3, குமார் லட்சுமி 5. தனலட்சுமி 6 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

***

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி.

சிவகங்கை ஒன்றியத்தில் அழகமாநகரி ஊராட்சி மன்ற தலைவராக ராதாகிருஷ்ணன் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய 1வது வார்டில் திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி.
 

***

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் - ஊராட்சி ஒன்றியம் தேர்தல் முடிவு.
அகமலை- கிராம ஊராட்சி தலைவர்  பதவிக்கு லதா தேர்வு. 

வார்டு உறுப்பினர்களாக ஒச்சகாளை - 1 , விஜயா 2, முருகன் 3 , மருதம்மாள் 4, சாரதா 5, ரமேஷ்பாபு 6 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டில் திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் சவிதா ரமேஷ் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 37,830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ,700 கிராம ஊராட்சிமன்றத் தலைவா்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இரண்டாம் கட்டம்: அதேபோன்று, 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 38,916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4,924 கிராம ஊராட்சித் தலைவா்கள் என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com