அந்த முதல் தேர்தல்: அருள்நாதன் தங்கராசு
By DIN | Published On : 11th April 2019 02:36 AM | Last Updated : 11th April 2019 02:36 AM | அ+அ அ- |

1957 சட்டப்பேரவைத் தேர்தலில் எனது முதல் வாக்கைப் பதிவு செய்தேன். 5 முறை தேர்தல் வாக்குச்சாவடி மைய தலைமை தேர்தல் அலுவலராகப் பணியாற்றி இருக்கிறேன்.
அப்போது, மக்கள் எந்தவிதமான பயமுமின்றி ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வேட்பாளர்களும், வாக்குச்சாவடி மையத்துக்கு மிகவும் அமைதியான முறையில் வந்து வாக்குப் பதிவு நிலவரத்தைத் தெரிந்துகொண்டு செல்வர். இப்போது, கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், மக்கள் சிந்தித்து வாக்களிக்க, தெளிவான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. ஜனநாயக முறைப்படியும், அரசியல் சாசனத்தின்படியும் குளறுபடி இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு.
-அருள்நாதன் தங்கராசு (85),
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்,
சீலோவாம், திருக்கோவிலூர்.