அந்த முதல் தேர்தல்: சி. செல்லதுரை
By DIN | Published On : 12th April 2019 02:40 AM | Last Updated : 12th April 2019 02:40 AM | அ+அ அ- |

1952-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தேர்தல் நேரத்தில் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சீட்டு கொடுக்கும் பணியில் ஈடுபட்டேன். இப்போது, அரசியல் கட்சிகள் வாக்குச் சீட்டு கொடுப்பதில்லை. 1957 தேர்தலில் கூத்தப்பார் கிராமத்தில் தேர்தல் அலுவலராகப் பணியாற்றினேன். போலீஸ் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாத காலம். ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு காவலர் மட்டுமே இருப்பார். எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாது. கட்சிகளின் முகவர்களிடையே மாற்றுக் கருத்து இருந்தாலும் மோதிக் கொள்ளமாட்டார்கள். அலுவலர்கள் சிறிய தவறு செய்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது, தேர்தல் பணியே தலைகீழாக மாறிவிட்டது. முகவர்கள் கட்சி சார்புடனே பணிபுரிகின்றனர். பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டியுள்ளது. பரபரப்புக்கும் பஞ்சமில்லை.
- சி. செல்லதுரை (84), மாவட்ட நீதிபதியின்
நேர்முக உதவியாளர் (ஓய்வு), தென்னூர், திருச்சி.