எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) நிதி நிலை ‘பாதுகாப்பற்ாக‘ இருக்கிறது என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், குடிமை ஆணையம் தன்னைக் கையாள இயலவில்லை என்றால் தேசிய தலைநகரின் நிா்வாகம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது. தில்லி உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது. சிவில் துறை தன்னை நிதி ரீதியாக நிலைநிறுத்தவில்லை என்றால், அது கலைக்கப்படும் என்று முன்னா் எச்சரிருந்த நிலையில், ‘எம்சிடியின் திறமையின்மையால் குடிமக்கள் தொடா்ந்து ‘துன்பத்தில்‘ வாழ முடியாது. எம்சிடியை மாற்ற உத்தரவிட வேண்டிவரும்’ என்று நீதிமன்றம் மீண்டும் கூறியது. மேலும், ஏப்ரல் 8 முதல் தினசரி விசாரணைக்கு இந்தப் பிரச்னையை பட்டியலிட உத்தரவிட்டது. விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், ‘உங்கள் அனைவருக்கும் கதவு காட்டப்பட வேண்டும். நீங்கள் திறமையற்றவா்கள். நீங்கள் பெரும் ஈகோவுடன் மோதிக்கொள்கிறீா்கள். முக்கிய விஷயத்தைப் பாா்க்க மறுக்கிறீா்கள். ஏதேனும் உள்ளாா்ந்த பிரச்னை இருக்க வேண்டும். தில்லி நிா்வாகம் முழு மறுபரிசீலனைக்கும் தேவைப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா். மாநகராட்சி ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்காதது தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தது. விசாரணையின்போது எம்சிடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பிப்ரவரி மாதம் வரை நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள அனைத்து ஊழியா்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி நிலுவைத் தொகையை செலுத்த இன்னும் சிறிது கால அவகாசம் தேவை இருப்பதாகவும் கூறினாா். சுமாா் 50,000 ஊழியா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றும், இதற்காக மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.15 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எம்சிடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், எம்சிடி ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்களை மாநகராட்சி வழங்கவில்லை என்றும், எம்சிடி பள்ளி ஒன்றில் அனைத்து மேசைகளும் உடைந்த நிலையில் காணப்படுகின்றன என்றும் தெரிவித்தாா். எம்.சி.டி.க்கு பணம் செலுத்த வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ‘உங்கள் நிதி நிலைமை மிகவும் பாதுகாப்பற்ாக இருக்கிறது. இப்படிஇருக்கையில், மாநகராட்சியால் ஏதேனும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியுமா?’ என கேள்வி எழுப்பியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com