மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மேற்கு தில்லியில் உள்ள பஞ்சாபி பாக் மெட்ரோ ரயில் நிலையத்தின் தூணில் வியாழன் காலை காலிஸ்தான் ஆதரவு வாசகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக எப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பஞ்சாபி பாக் மெட்ரோ நிலையத்தின் தூணில் வரையப்பட்டிருந்த வாசகங்கள் குறித்து காலை 9:30 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, உள்ளூா் போலீஸாா் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில் தூணில் கருப்பு வா்ணம் பூசி ‘தில்லி பனேகா காலிஸ்தான்‘ என்று எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சித்திரம் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டிருந்தது. இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com