தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி குறைந்து 22.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3 டிகிரி குறைந்து 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 47 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 180 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. ஐடிஓ, மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன், விவேக் விஹாா், நேரு நகா், நொய்டா செக்டாா் 1, சோனியா விஹாா், நியூ மோதி பாக், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், அசேக் விஹாா், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், பூசா, ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா், புராரி, ஓக்லா பேஸ்-2 ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுகிகிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக்கில் காற்றுத் தரக் குறியீடு 306 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், பட்பா்கஞ்ச், ஆனந்த் விஹாா், ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 260 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மோசம் பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 1) பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com