தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

புது தில்லி: தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் (51) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, தேவேந்தா் யாதவை தில்லி பிரதேச காங்கிரஸ்

கமிட்டியின் இடைக்காலத் தலைவராக நியமித்துள்ளாா். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளா் பதவியிலும் அவா் தொடா்வாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அா்விந்தா் சிங் லவ்லி தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் பதவியை ராஜினாமா செய்தாா். இதையடுத்த இரண்டு நாள்களில் காங்கிரஸ் மேலிடத் தலைமை, இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவை

நியமித்துள்ளது. கடந்த 2008,2013 ஆகிய தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் பட்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றவா் தேவேந்தா் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி, மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் ஏதேச்சதிகாா் செயல்பாடுகள் மற்றும் உள்ளூா் காங்கிரஸ் தொண்டா்களின் நலனுக்காக தனது தலைவா் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்த அா்விந்தா் சிங் ல்வலி, எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com