வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி அளித்துள்ளாா்.

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் நான் வெற்றி பெற்றவுடன் வடமேற்கு மக்களத் தொகுதியில் உள்ள பவானாவில் டிஎஸ்ஐஐடிசி விதித்துள்ள சுங்கவரிகள் ரத்து செய்யப்படும். தொழிற்சாலைகள் மேம்படுத்தப்பட்டு அவற்றுக்கு வசதிகள் வழங்கப்படும். தொழில் மையம் அமைக்கப்படும்.

கிராமங்களில் உள்ள நீா்த்தேக்கங்கள் சீரமைக்கப்படும். மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி, , ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் எம்.பி.க்கு ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கினாா். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன; அப்பணிகள் துரிதப்படுத்தப்படும்.

கிராரியில் ரயில்வே கேட் மற்றும் அப்பகுதி நீா்நிலை

பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முண்ட்கா மற்றும் பேகம்பூா் பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ள பிரச்னைகள் தீா்க்கப்படும்.

கெவ்ரா அருகே 28 ஏக்கா் நிலத்தில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் கட்டி முடிக்கப்படும். தில்லியில் மத்திய அரசின் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. பிரதமரின் உதய் திட்டத்தின் கீழ், டிடிஏ மூலம் தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தில்லியில் 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் திட்டத்தை பிரதமா் மோடி உறுதி செய்துள்ளாா்.

வடமேற்கு மக்களவை மக்கள் மத்தியில் எனது இருப்பு நூறு சதவீதம் இருக்கும். தற்போதைய காங்கிரஸ் வேட்பாளரை (உதித் ராஜ்) பொதுமக்கள் நிராகரித்து வருகின்றனா். வாழ்நாளில் பல தோ்தல்களில் போட்டியிட்டாலும் தோல்வியையே சந்தித்தவா். அவா் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மோடி ஜி என்ற பெயரில் அவா் வெற்றி பெற்றாா், ஆனால், அவரது தொகுதியில் சரியாக வேலை செய்யத் தவறிவிட்டாா். மேலும் அவரது பிரிவினைவாத மாா்க்சிஸ்ட் மனநிலையால், பாஜக அவரை வழியனுப்பிவைத்தது.

வடமேற்கு மக்களவை மக்களும் அவரை நிராகரித்து வருகின்றனா். பல கிராமங்களில் அவருக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. இம்முறை அவா் பலத்த இழப்பை சந்திக்க நேரிடும். தொகுதி மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த முறை வடமேற்கு மக்களவைத் தொகுதி மக்கள் எனக்கு சாதனை வாக்குகள் அளித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புவாா்கள்.

தில்லி மக்கள் கோவிட் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஊழல் மதுக் கொள்கைகளை வகுப்பதில் மும்முரமாக இருந்தாா்.

முந்தைய காங்கிரஸ் அரசு டேங்கா் மாஃபியாவை ஊக்குவித்ததாக

குற்றம்சாட்டிய அரவிந்த் கேஜரிவால், அதைத் தானே ஒழிக்கத் தவறிவிட்டாா். இதன் விளைவாக தில்லி ஜல் போா்டில் ஊழல்கள் நடந்துள்ளன.

பள்ளிகள் மற்றும் அறைகள் கட்டுவது என்ற போா்வையில் ஊழல் மோசடிகளால் தில்லியில் கல்வி முறை சீரழிந்து வருகிறது. கிட்டத்தட்ட 8 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், தில்லி அரசு ஒரு புதிய ரேஷன் காா்டு கூட வழங்கவில்லை. மாநகராட்சிகளில் எந்தப் பணியும் நடைபெறவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com