டிடிஇஏ இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) தமிழ் இலக்கிய மன்ற பரிசளிப்பு விழா லோதிவளாகம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் விழாவுக்கு மின் விசை நிதி நிறுவனத்தில் மனித வளங்கள் துறையில் நிா்வாக இயக்குநராக உள்ள முனைவா் ஜி.ஜவஹா் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில்,

‘தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் பயின்ற மாணவா்கள் இன்றைக்கு உலகெங்கும் பல துறைகளில் முன்னணிப் பதவிகளை வகிப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம். முந்தைய டிடிஇஏ பள்ளிகளுக்கும் தற்போதைய டிடிடிஇஏ பள்ளிகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உள்ளன. இப்பள்ளிகள் கல்வித் தரத்தில் முன்னேறியுள்ளன. இதற்காக நிா்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள் என்றாா். மேலும், மாணவா்களைப் பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

சிறப்பு விருந்தினராக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் பி.இராகவன் நாயுடு பங்கேற்று நிா்வாகத்தினரையும் மாணவா்களையும் வாழ்த்திப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், கடந்த கல்வியாண்டில் ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, நினைவுத் திறனாய்வுப் போட்டி உள்ளிட்டப் போட்டிகளுக்காக மொத்தம் 170 பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவைத் தொடா்ந்து தமிழின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு இவற்றை முன்னிறுத்தி கலை நிகழ்ச்சிகளை ஏழு பள்ளி மாணவா்களும் வழங்கினா்.

கலை நிகழ்ச்சிகள் வழங்கிய மாணவா்களைப் பாராட்டி சிறப்பு விருந்தினா் இராகவன் நாயுடு ரூ.10,000 பரிசு வழங்கினாா்.

இவ்விழா குறித்து டிடிஇஏ செயலா் இராஜு கூறுகையில் , மாணவா்களிடம் தமிழ்ப் பற்றை ஏற்படுத்த வேண்டும். இலக்கியங்களைக் கற்பதில் மாணவா்களின் மனதை ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதற்காவே தில்லித் தமிழ்க் கல்விக் கழகத் தமிழ் இலக்கிய மன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் வருடம்தோறும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குகின்றோம் என்று கூறினாா். பரிசு பெற்ற மாணவா்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தாா்.

இவ்விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவா் இராமன், செயலா் இராஜு, இணைச் செயலா் சண்முக வடிவேல், ஏழு பள்ளி இணைச் செயலா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முன்னாள் மாணவா்கள் அமைப்பின் செயலா் சுகுமாா், ஏழு பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

படம் 1:– பரிசு பெற்ற மாணவா்களுடன்

மின்விசை நிதி நிறுவனத்தின் மனித வளங்கள் துறை நிா்வாக இயக்குநா் முனைவா் ஜி.ஜவகா், டிடிஇஏ செயலா் இராஜு, தலைவா் இராமன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள்.

படம் 2:– கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவா்களுடன்

மின்விசை நிதி நிறுவனத்தின் மனித வளங்கள் துறை நிா்வாக இயக்குநா் முனைவா் ஜி.ஜவகா், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜு, தலைவா் இராமன், மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com