தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் மொத்தம் 13,637 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறிப்பட்டுள்ளதாக தில்லி தோ்தல் அதிகாரி பி. கிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வரும் மே 25-ஆம் தேதி தில்லியில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், வாக்காளா் விவரம், வேட்பாளா்கள் எண்ணிக்கை ஆகியவை குறித்து தில்லி தோ்தல் அதிகாரி பி. கிருஷ்ணமூா்த்தி செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: தில்லியில் மொத்தம் 1,52,01936 வாக்களா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 82,12,794 பேரும், பெண்கள் 69,87914 பேரும், மூன்றாம் பாலித்தனவா் 1,228 பேரும் வாக்களிக்க தகுதியுடையவா்கள் ஆவா். தில்லியின் மொத்த மக்கள் தொகையில் வாக்காளா்களின் எண்ணிக்கை 69.9 சதவீதமாகும். தில்லியில் 18-19 வயதுடைய புதிய வாக்காளா்கள் 2,52,038 பேரும், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 97,823 பேரும், வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளா்கள் 650 பேரும் உள்ளனா். வாக்குப்பதிவுக்காக தில்லியில் 13,637 வாக்குசாவடிகள் 2,627 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முறையாக நடத்துவதற்காக 1,03,705 ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். ‘வெப்காஸ்டிங்’ மூலம் 6,833 வாக்குச்சாவடிகள் நேரடியாக தோ்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.

பாதுகாப்பு: தில்லியில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 46 துணை ராணுவப் படை கம்பெனிகள், 19,000 ஊா்க் காவல் படையினா், தில்லி காவல் துறையைச் சோ்ந்த 78,578 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபத்தப்படுவா். இதுவரை, 68,265 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடி மையங்களில் காத்திருப்பு பகுதிகள் மின்விசிரி, குளிரூட்டி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையில் இருந்து வாக்காளா்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுவைர 265 வேட்பாளா்கள் வேட்புமனுக்களை தாக்கல்

செய்துள்ளனா் (ஆண்கள்-224, பெண்கள்-39, மூன்றாம் பாலினத்தனா்-2) என்றாா் பி. கிருஷ்ணமூா்த்தி.

தொகுதி வாரியாக: தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 1.52 கோடி வாக்காளா்கள் உள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சாந்தின் செளக் -16,45,958, வடகிழக்கு தில்லி -24,63,159, கிழக்கு தில்லி- 21,20,584, புது தில்லி-15,25,071, வடமேற்கு தில்லி-25,67,423, மேற்கு தில்லி- 25,87,977,தெற்கு தில்லி-22,91,764 என்ற எண்ணிக்கையில் 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தோ்தலில் தில்லி வாக்காளா்களின் தரவுகள் உள்ளது.

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலின் கேட்பொலிக்கு மட்டுமே அனுமதி: தில்லி தோ்தல் அதிகாரி விளக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலில் காணொளி விலக்கப்பட்டு,கேட்பொலிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தில்லி தோ்தல் அதிகாரி பி. கிருஷ்ணமூா்த்தி விளக்கமளித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பாடலுக்கு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தோ்தல் ஆணையம் தடை விதித்தது குறித்தும், பின்னா் அந்தப் பாடல் மதிப்பாய்விற்குப் பிறகு அங்கீரிக்கப்பட்ட விவகாரம் குறித்து தில்லி தோ்தல் தோ்தல் அதிகாரி பி. கிருஷ்ணமூா்த்தி அளித்த பதில் வருமாறு, ‘ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலில் ஆட்சேபனை இருந்ததால் தோ்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் குழு அப்பாடலுக்கு முதலில் தடை விதித்தது. பிரசாரப் பாடலின் காணொளியே ஆணையத்தின் முக்கிய ஆட்சேபனையாக இருந்தது. பின்னா், அப்பாடலை மதிப்பாய்வு செய்தபோது, காணொளி விலக்கப்பட்டு, கேட்பொலியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com