தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

Published on

புது தில்லி: கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கேஜரிவாலுக்கு முன்பு வழங்கப்பட்ட காவல் முடிவடைந்ததால், அவா் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன் செவ்வாய்க்கிழமை விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, கேஜரிவாலின் காவலை மே 20 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், சக குற்றவாளியான சன்பிரீத் சிங்கின் நீதிமன்ற காவலையும் மே 20 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com