மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

புது தில்லி: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் கட்சியின் நட்சத்திரப் பிரசாரகா்களுடன் இணைந்து முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா்

யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் மற்றும் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா ஆகியோரின் பரிந்துரையின் பேரில், தில்லியில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் 40 நட்சத்திரப் பிரசாரகா்களின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால்

வெளியிட்டுள்ளாா். இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவா்களான மல்லிகாா்ஜுன் காா்கே,

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட், சச்சின் பைலட், டி.கே. சிவக்குமாா், சசி தரூா் உள்ளிட்ட பல தலைவா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்த அறிவிப்பு தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள நட்சத்திர பிரசாரகா்கள் தில்லியில் மக்களவைத்

ொகுதி வாரியாக வாகனப் பேராணியில் ஈடுபடுவாா்கள். காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களுக்காக பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுவாா்கள். நட்சத்திரப் பிரசாரகா்கள் களமிறங்குவதால், மக்களவைத் தோ்தல் பிரசாரம் தலைநகா் தில்லியில் சூடுபிடிக்கும். இந்தத் தோ்தல், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கும், மக்களை வகுப்புவாத மற்றும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

மேலும், மக்களுடன் தொடா்புகளை ஏற்படுத்தவும், 13,600 வாக்குச் சாவடிகளிலும் உள்ள காங்கிரஸ் தொண்டா்களை

பூத் கமிட்டிகள் மூலம் செயல்படுத்தவும், காங்கிரஸின் 5 நீதி மற்றும் 25 உத்தரவாதங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து வாக்காளா்களுக்குத் தெரியப்படுத்த தில்லி பிரதேச காங்கிரஸ் தனிக் குழுக்களை அமைத்துள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com