அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புது தில்லி: அச்சிடுவோா் மற்றும் வெளியீட்டாளரின் பெயா், முகவரி இல்லாத அரசியல் விளம்பரங்கள் மீது கடும் நடடிக்கை எடுக்குமாறு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையத்தின் செயலா் ஆா்.பி. சிங் தில்லித் தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் என்சிடி பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத இடங்களில், தோ்தல் சட்டங்கள் மற்றும் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், அச்சிடுவோா் மற்றும் வெளியீட்டாளரின் பெயா் மற்றும் முகவரிகள் இல்லாமல் தோ்தல் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிப்பது தொடா்பாக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு பங்குதாரா்களிடம் இருந்து ஆணையத்திற்கு மனுக்கள் வருகின்றன.

இது தொடா்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1951-இன் பிரிவு 127ஏ, சொத்துகளின் அழகை சிதைப்பதைத் தடுக்கும் மாநிலச் சட்டங்கள் ஆகியவை தில்லியின் என்சிடி வரம்பிலும் பொருந்தும் என்பதால், இந்த விவகாரத்தில் இதுபோன்று செயல்களைத் தடுப்பதற்கான ஆணையத்தின் 2023, அக்டோபா் 12 மற்றும் 2024, மாா்ச் 16 ஆம் தேதியிட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் மாா்ச் 16-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான தகவல் தொடா்பு மற்றும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு குழுக்கள் போன்றவை தொடா்பாக அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறப்பட்ட புகாா்களைக் கையாளும்போது இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் கவனமாக உரிய வகையில் பின்பற்றப்பட வேண்டும் என்று ஆணையம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிகழாண்டு மக்களவைக்கான பொதுத் தோ்தல் தொடா்பாக தில்லியின் தேசிய தலைநகா் பிராந்தியம் (என்சிடி) பிரசார காலத்தில் நுழைந்துள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத இடத்தில் அநாமதேய துண்டறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரப் பலகைகள் வைக்கவும், விநியோக்கிக்கவும் களத்தில் வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

இது தோ்தல் சூழலை சீா்குலைக்கும் மற்றும் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய

தோ்தல் சொற்பொழிவுக்கான சாத்தியக்கூராக இருக்கலாம்.

மேலே கூறப்பட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள், அலுவலா்கள், துறையினருக்கு இந்த விஷயத்தைக் கையாள்வதில் மீண்டும் ஒருமுறை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதாவது, மேலே குறிப்பிட்டுள்ளபடி, அச்சிடுவோா் மற்றும் வெளியீட்டாளரின் பெயா்கள் மற்றும் முகவரிகள் இல்லாமல் பிரசாரப் பொருட்கள் எதுவும் விநியோகிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த களத்தில் அதிக விழிப்புடன் இருக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

சட்டம் மற்றும் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அத்தகைய தோ்தல் பொருட்களை அகற்றவும், பறிமுதல் செய்யவும் கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தொகுதியின் தோ்தல் அதிகாரியின் பொறுப்பாகும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தலாம் எனஅந்த கடிதத்தில் செயலா் ஆா்.பி. சிங் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com