

நீரின் பேரோசை (கனடா பயணம்) - சா.கந்தசாமி; பக்.320; ரூ. 175; கவிதா வெளியீடு; சென்னை. )044- 23364243.
கனடா என்றால் கிராமம் என்று பொருள் என்று தொடங்கி, 1875-ல் ஒருலட்சம் பேர் வரை பேசி வந்த கனடாவின் ஆதி குடிமக்களின் மொழியான சின்னூக் மறைந்தே போய்விட்டது வரை தன் பயண வரலாறோடு கனடாவின் வரலாறையும் சொல்லிச் செல்கிறார் சா.கந்தசாமி. பொதுவாக பயண அனுபவங்கள், பயணம் செய்பவர்களின் சொந்த அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளும். இந்நூல் அப்படியில்லை. வட எல்லையான அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து 1867-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் ஜான்சன் 7.2 மில்லியன் டாலர் விலைகொடுத்து வாங்கியது, 1968-ல் கனடாவின் பிரதமரான லிபரல் கட்சியைச் சேர்ந்த தரூடு தம் கடைசி காலம் வரை பிடல் காஸ்ட்ரோவுடன் நல்லுறவு போற்றியது, கனடாவின் பத்து சிறந்த மனிதர்களில் தரூடுவின் பெயர் தேர்வு செய்யப்பட்டது போன்ற பல்வேறு தகவல்கள் நூலை சரித்திர ஆவணத் தொகுப்பாகப் போற்ற வைக்கிறது. கனடாவுக்கு முருங்கைக் கீரை எங்கிருந்து கிடைக்கிறது. முருங்கைக்காயை ஏன் அங்கு பயன்படுத்துவதில்லை போன்ற இயல்பான பல தகவல்கள் போகிற போக்கில் கொட்டிக் கிடக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.