அந்தக் கதவு மூடப்படுவதில்லை

அந்தக் கதவு மூடப்படுவதில்லை; பிரபஞ்சன்; பக்.192; ரூ.140; நற்றிணைப் பதிப்பகம், சென்னை-4; )044 - 2498 7700. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. நட்பு, காதல், மனித நேயம், சுதந்திரத்தின் தேவை இப்படிப் பல உண
அந்தக் கதவு மூடப்படுவதில்லை
Updated on
1 min read

அந்தக் கதவு மூடப்படுவதில்லை; பிரபஞ்சன்; பக்.192; ரூ.140; நற்றிணைப் பதிப்பகம், சென்னை-4; )044 - 2498 7700.

பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. நட்பு, காதல், மனித நேயம், சுதந்திரத்தின் தேவை இப்படிப் பல உணர்ச்சிகளை சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. மனதளவில் அடக்கப்பட்டிருக்கும் பெண்மை சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் எதார்த்தத்தை விவரிக்கிறது ஒரு கதை. புராணச் சம்பவத்தைப் புரட்டிப் போடுகிறது இன்னொரு கதை. எதை இழந்தாவது காதலைப் பெறு; காதலை இழந்தாவது நட்பைப் பெறு என்கிறது இன்னொரு கதை. ஒவ்வொரு கதையிலும் "எல்லோரும் நல்லவரே' என்னும் அடிநாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. "இவர் இப்படித்தான்.... அவர் அப்படித்தான்' என்ற வரையறைகளுக்குள் மனிதர்களை எதிர்பார்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அலசுகின்றன, இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும், நாம் இதுவரை முன்முடிவுகளாக வைத்திருந்த கருத்துகளைப் பற்றிய புது வெளிச்சம் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com