தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு - , பேராசிரியர் இராஜா வரதராஜா; பக். 672; ரூ.125; அருண் பதிப்பகம், திருச்சி -1; )98944 40530. தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழி
தமிழ் இலக்கிய வரலாறு
Updated on
1 min read

தமிழ் இலக்கிய வரலாறு - , பேராசிரியர் இராஜா வரதராஜா; பக். 672; ரூ.125; அருண் பதிப்பகம், திருச்சி -1; )98944 40530.

தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுபவை தமிழ் இலக்கியங்கள். அவை காலத்தால் அழிந்துவிடாதபடி தமிழின் இலக்கிய வரலாறு முறையாகப் பதிவுசெய்யப்பட்டு அதன் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்தவர் தமிழறிஞர் கா.சுப்பிரமணியப்பிள்ளை. அவருக்குப் பின் மு.அருணாசலம், மு.வரதராசன், தி.வை.சதாசிவபண்டாரத்தார், க.வெள்ளைவாரணர் போன்ற தமிழறிஞர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப பல கூடுதல் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் இலக்கியத்தைக் கால வரிசைப்படி பதிவு செய்வது மிகவும் அவசியம். அந்தவகையில், தொடர்ந்து பலர் இப்பணியில் ஈடுபட்டு புதிய புதிய படைப்பாக்கங்களைப் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் இந்நூல் புதிய வரவு. கூடுதல் தகவல் என்ன பதிவாகியுள்ளது என்றால், நாவல், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை, ஹைக்கூ, பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், ஊடகத்தமிழ், திரைப்படத் தமிழ், திரையிசைத் தமிழ், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், திருநங்கைகள் இலக்கியம் என சமகாலத்தில் உருவான படைப்பாளிகள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் என அனைத்தும் பதிவாகியுள்ளன.

÷அதுமட்டுமல்ல, போட்டித் தேர்வுக்குப் பயன்படும் வகையில் இலக்கிய வினா-விடை, சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உலகத் தமிழ் மாநாடுகள் எனக் கூடுதல் தகவல்கள் நூலை மேலும் மெருகேற்றியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com