மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் - சாமி.சிதம்பரனார்; பக்.104; ரூ.60; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044-2433 1510.
மாணிக்கவாசகரின் செந்தமிழ்ப் பாக்களில் மனதைப் பறிகொடுத்த தமிழறிஞர் சாமி.சிதம்பரனார், மெய்ஞானமே இன்ப ஊற்று, பக்தர்களின் மாண்பு, சாவதற்கு விரும்பேன், நானே சமர்த்தன் முதலிய 14 தலைப்புகளில் மணிவாசகரின் பாடல்களைக் கொண்டே தான் வைத்த தலைப்புகளுக்கேற்ப கட்டுரையை எழுதியுள்ளார்.
"திருமந்திரத்துக்கு இணையான நூல் எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம். தமிழர்களின் ஆத்ம ஞானத்திற்குத் திருமந்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய அருமையான நூலுக்கு இன்னும் சரியான உரை காணப்படவில்லை. திருமூல நாயனாரும், திருமந்திரம் பாடிய திருமூலரும் ஒருவர்தான் என்பது உறுதியானால், திருமந்திரம் கி.பி.5-ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்பது உண்மையாகலாம். இது உண்மையானால், ஆரியர் } தமிழர் வெறுப்பையும், வடமொழி } தமிழ்மொழி வெறுப்பையும் வளர்க்கும் வெறியருக்குத் திருமந்திரமே சரியான சவுக்கடியாகும்' என்று கூறும் ஆசிரியர் திருமந்திரத்திலே ஆழங்கால்பட்டு திருமந்திரத் தொடர்புடைய 14 கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
மணிவாசகரின் மணிமொழிகளையும் திருமூலரின் யோக மொழிகளையும் ஒருசேர தேர்ந்தெடுத்து அளித்துள்ளது நூலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.