க.நா.சுப்ரமண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - தொகுப்பாசிரியர் : சா. கந்தசாமி; பக்.240; ரூ.125; சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது.
க.நா.சு மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. "வாழ்க்கைப் பந்தயத்தில்' சிறுகதையுடன், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, தமிழ் எழுத்தாளர் எவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
கதைகளை எந்த ஆண்டு, எந்த இதழில் வெளிவந்தவை எனும் குறிப்புகள் இல்லாமல் வெளியிட்டிருப்பது சாகித்திய அகாதெமியின் அலட்சியத்தைக் காட்டுகிறது. முன் அட்டையில் சாகித்திய அகாதெமி இலச்சினையும், சா. கந்தசாமி பெயருக்கு முன்பாக "தேர்வு செய்தவர்' என்ற அடைமொழியும் இருக்க வேண்டாமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.