தந்தை கோரியோ; பிரெஞ்ச் மூலம்: ஒனோரே தெ பல்சாக்

தந்தை கோரியோ; பிரெஞ்ச் மூலம்: ஒனோரே தெ பல்சாக்; தமிழில்: ச.மதனகல்யாணி; பக்.434; ரூ.220, சாகித்திய அகாதெமி, இரவீந்திர பவன், 35 பெரோஸ்ஷா சாலை, புது தில்லி-1.
Updated on
1 min read

தந்தை கோரியோ; பிரெஞ்ச் மூலம்: ஒனோரே தெ பல்சாக்; தமிழில்: ச.மதனகல்யாணி; பக்.434; ரூ.220, சாகித்திய அகாதெமி, இரவீந்திர பவன், 35 பெரோஸ்ஷா சாலை, புது தில்லி-1.

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பல்சாக் படைத்த புதினங்களில் தந்தை கோரியோ மிக நீண்ட கதையாகும். அக்கால பாரீஸ் நகர மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவற்றை இப்புதினம் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

சமூகம், பணம், முன்னுக்கு வரவேண்டும் என்ற தாகம், பாசத்திற்கு அடிமையானதால் உண்டான அழிவு ஆகியவை துருவக்கடலில் மிதக்கும் பனிப்பாறைத் துண்டுகளைப் போன்று இந்நாவலில் புடைத்து நிற்கின்றன.

தந்தை கோரியோவின் கதையில், புடைப்புச் சிற்பங்கள்போல் சமூகத்தை அடுத்து இருப்பவை பணமும், பாசமும். பணத்தின் ஆளுமை எடுத்த எடுப்பிலேயே எண்களால் கணிக்கப்படுகிறது. தந்தை மகள்கள் மேல் கொண்ட பிணைப்பை சவக்குழியில் தள்ளுவதே பணம்தான். பணத்தை உறிஞ்சிய பிறகு அவருடைய மகள்களும், மருமகன்களும் கோரியோவை வெளியே தள்ளி கதவை அடைத்து விடுகின்றனர். அவருடைய பாசத்துக்கும் பற்றுக்கும் அன்பளிப்பாய் அவர் அழிவையே பெறுகிறார்.

பாசம் பலவீனத்தைத் தந்து பாழ்படுத்துவதைக் காட்டிலும் வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை இக்கதையின் வாயிலாக வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com