பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இவனன்றோ என் நண்பன்

இவனன்றோ என் நண்பன் - சூ.குழந்தைசாமி; பக்.72; ரூ.20; காந்தி அமைதி நிறுவனம், சென்னை-18; 044 - 2499 3839.

News image
Updated On :15 ஜூலை 2018, 6:56 pm

சூ.குழந்தைசாமி

இவனன்றோ என் நண்பன் - சூ.குழந்தைசாமி; பக்.72; ரூ.20; காந்தி அமைதி நிறுவனம், சென்னை-18; 044 - 2499 3839.
காந்திய நெறி பரப்பும் பணியில் தனது இளமைக்காலம் முதல் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், தனது வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிறுவயதில் "ஒன்றுக்கும் உதவாதவராக' இருந்த அவர் 21 வயதில் ஒரு 52 வயது நண்பரைச் சந்திக்கிறார். அவர் டி.டி.திருமலை. அவரைச் சந்தித்த நாள் முதல் அவரின் வழிகாட்டலில் தனது வாழ்க்கை எவ்வாறு நல்லவிதமாக மலர்ந்தது என்பதை பல நிகழ்வுகள் மூலம் மிகவும் சுவையாக இந்நூலில் எழுதிச் செல்கிறார் நூலாசிரியர். 
பி.இ.கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த அவர், அந்தப் படிப்புக்குரிய வேலையைச் செய்யாமல், காந்திய நெறி பரப்பும் பணியில் சிறிய இதழ்களை வெளியிடுவது, புத்தகங்கள் விற்பது, கூட்டங்கள் நடத்துவது என முழுக்க முழுக்க பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். "உழைப்பையும் அதில் வரும் பலனையும் தொடர்புபடுத்தாமல்', நீதி, அன்பு, அறம் தழைக்கச் செய்யும் செயல்களை மட்டுமே செய்கிறார். 
இவருடன் இன்ஜினியரிங் படித்த நண்பர் ஒருவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அவர் இவருக்கு அனுப்பிய இ மெயிலில், "குழந்தை, நிறைய சம்பாதித்துவிட்டேன். ஆனால் உன்னை மாதிரி என்னால் சிரிக்க முடியவில்லை' என்று குறிப்பிட்டிருப்பதைச் சொல்லிய நூலாசிரியர், "நாம் வாழ்கிறோமா அல்லது உயிருடன் இருக்கிறோமோ? உயிருடன் இருப்பவர்கள் எல்லாம் வாழ்ந்துவிடுகிறார்களா என்ன?' என்ற ஆழமான சிந்தனையில் நம்மை மூழ்கச் செய்துவிடுகிறார். எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்க்கை அனுபவங்களில் இருந்து விளங்கச் செய்யும் சிறந்த நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.