வெற்றி வித்துக்கள்

வெற்றி வித்துக்கள் -  நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.146; ரூ.100;  நன்னூல் அகம், ஏஇ -42, தாடண்டர் நகர், சைதாப்பேட்டை, சென்னை-15.
வெற்றி வித்துக்கள்
Updated on
1 min read

வெற்றி வித்துக்கள் -  நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.146; ரூ.100;  நன்னூல் அகம், ஏஇ -42, தாடண்டர் நகர், சைதாப்பேட்டை, சென்னை-15.

நூலின் தலைப்புக்கு ஏற்றவிதத்தில் படைக்கப்பட்டிருக்கும் அருமையான குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல். 

தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்து பல  நூல்கள் வெளிவந்திருந்தாலும், அவை எல்லாம் சொல்லக் கூடிய விஷயங்களை நேரடியாகச் சொல்பவையாக இருக்கின்றன.  அல்லது ஆலோசனை சொல்பவையாகவோ,  அறிவுரை சொல்பவையாகவோதான் புரிந்து கொள்ளப்படுகின்றன. பிறரின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை குறைந்துவரும் இக்காலத்தில், அத்தகைய நூல்கள் ஏற்படுத்தும் தாக்கமும் குறைவாகவே இருக்கிறது.

இந்நூல் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, குறுங்கதைகள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்களை மிகவும் எளிமையாக வாசகர்களுக்கு உணர்த்துகிறது. புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது.

படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்களும் கூட படிக்கும் விதத்தில் குறுங்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பல சுயமுன்னேற்ற, தன்னம்பிக்கை நூல்கள் சொல்லக்கூடிய விஷயங்களை சுவையாகச் இந்த நூல் சொல்லிவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com