

தேவேந்திர குல வேளாளர் வரலாறு - தே.ஞானசேகரன்; பக்கம் 160 ; ரூ.170 ; காவ்யா பதிப்பகம், சென்னை-24 ; 044-2372 6882.
கடந்த 2000-ஆம் ஆண்டு "மள்ளர் சமூக வரலாறு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தநூல், தற்போது "தேவேந்திரகுல வேளாளர் வரலாறு' என்ற பெயரில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மருத நில உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தோற்ற வரலாறு 12 கதைகள் மூலமும், தொல்காப்பியச் சான்று, இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாட்டுப்புற வழக்காறு, பள்ளு நூல்கள், சடங்கு பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் மள்ளர் என்றும், நாயக்கர் ஆட்சி காலத்தில் பள்ளர் என்றும், தற்போது தேவேந்திர குல வேளாளர் என்றும் அழைக்கப்படும் சமூகத்தின் வரலாறு, வேளாண்மை வாழ்க்கை, வழிபாட்டு மரபுகள், உரிமைகள், வாழ்வியல் முறை, பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் தொடர்பான 17 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதிகளில் ஒருவரான விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் வரலாற்றுக் குறிப்புகளுடனும், தென் மாவட்ட ஜாதி மோதல்களுக்கான காரணங்கள், தீர்வுகள் குறித்த நிகழ்வுக் குறிப்புகளுடனும் கூடிய கட்டுரைகள், ஜாதி மோதல்களை தவிர்த்து இணக்கத்தை வலியுறுத்துகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.