

இறையருள்- சீத்தலைச் சாத்தன்; பக்.111; ரூ.130; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிமிடெட், பெங்களூரு- 560 076. ✆ 74185 55884.
ஹிந்து மதத்தின் இரு பிரிவுகளான சைவம், வைணவம் என்றாலும், சிவனும், திருமாலும் சம்பந்திகள் என்று புராணம் சொல்கிறது என்றும், விட்டுக் கொடுத்து வாழும் தத்துவத்தையே இது உணர்த்துகிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.
சைவர்கள் அணியும் உருத்ராட்சம், வைணவர்கள் அணியும் சாளக்கிராமம் ஆகிய இரண்டினால் ஏற்படும் நன்மைகள், ஜோதிட ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் ஏற்படும் பலன்கள், அணியும் முறைகள், ஏற்படும் சந்தேகங்களுக்கு முழு அளவில் நூலாசிரியர் விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர, 26 தலைப்புகளில் சிறு சிறு தகவல்கள் நிறைந்த கட்டுரைகளையும் அவர் தொகுத்து எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவன், பக்தி, தானம், தருமம், புண்ணியம், தேரோட்டம், ஜாதகம், மன அழுத்தம், வெற்றியின் இலக்கு, அண்டம்- பிண்டம், தனிமை, வாழ்க்கை, தலைமுறை இடைவெளி, தன்னம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் வழிகாட்டுதல், விளக்கம் தரப்பட்டுள்ளது. புத்த மதம் குறித்தும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
பல ஆன்மிகப் புத்தகங்களைப் படித்து அறிய வேண்டிய விஷயங்களை ஒற்றை நூலிலேயே சுருக்கமாக அளித்துள்ள நூலாசிரியர் தனது அன்றாட வாழ்க்கையில் எழுதிய கருத்துச் சிதறல்களையும் குறிப்பிட்டுள்ளார். அவை எந்தக் காலத்துக்கும் ஏற்றவை.
இளைய தலைமுறையினருக்கு இந்த நூல் கையேடு என்பதோடு, கருணை, ஒழுக்கம், நன்றி உணர்வு போன்றவற்றின் வளர்ச்சியை எடுத்துரைக்கும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.