ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர்; தாய்லாந்தில் பாரதியார்

படகுப் பயணம், மனம் மகிழும் நீர்விளையாட்டுகள், மிதக்கும் அங்காடி, இரவு நேர கடை வீதி என்று தாய்லாந்தின் சிறப்புகளை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.
ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர்;  தாய்லாந்தில் பாரதியார்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர் தாய்லாந்தில் பாரதியார்- முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன்; பக்.96; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை-600 017; ✆ 044- 2434 2810.

தமிழிசைக் கலைஞர், கர்நாடக இசை வித்வான், திரைப்படப் பின்னணிப் பாடகர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளைக் கொண்ட நூலாசிரியர் சிறந்த எழுத்தாளரும்கூட! இவர் பிரபலங்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் இனிமையான பயண அனுபவங்கள், நினைவுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திருவள்ளுவர் சிலையை நிறுவிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் மற்றும் அவரது குழுவினருடன் நூலாசிரியர் மேற்கொண்ட பயணத்தின் தொடக்கம்முதல் நிகழ்ச்சி நிரல், சுற்றுப் பயணம், ஊர் திரும்புதல் வரை படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. இதற்கு நூலாசிரியரின் எளிய தமிழ் நடையே காரணம் எனலாம்.

பயணத்தின்போது திருக்குறள் வாசிப்பு, அது தொடர்புடைய பேச்சுகள், பிற நிகழ்ச்சிகள் குறித்த குறிப்புகளை வாசிக்கும்போது, அந்தப் பயணத்தில் நாமும் பங்கேற்றோமோ என்ற எண்ணமே மேலோங்குகிறது.

ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விழாவை சென்னையில் நடத்தும் பாரதியார் சங்கம் மலேசியாவின் கோலாலம்பூரிலும், இலங்கையின் கொழும்பிலும் நடத்திவிட்டு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடத்தியிருக்கிறது. இந்த விழாவுக்குச் சென்ற 50 பேர் குழுவினரின் பயண விவரத்தையும், நிகழ்ச்சியையும் முந்தைய நிகழ்வைப்போலவே நூலாசிரியர் தொகுத்துள்ளார்.

படகுப் பயணம், மனம் மகிழும் நீர்விளையாட்டுகள், மிதக்கும் அங்காடி, இரவு நேர கடை வீதி என்று தாய்லாந்தின் சிறப்புகளை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com