

பட்டுத்தறி-இரா.பாரதிநாதன்; பக்.80; ரூ.100; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை- 600 055, ✆ 044-2638 5272.
குடும்பத்தினர் மீது அளவற்ற பாசம் கொண்ட, நெசவாளர் சமுதாயத்தைச் சேர்ந்த நாயகன் குறித்த கதை. சென்ற தலைமுறை நெசவாளர் சமுதாயத்தில் இருந்த ஜாதி, தொழில் மீதான பற்றுதலுக்கும், அதே சமுதாயத்தில் தற்போதைய தலைமுறையினருக்கு உள்ள சமூகப் புரிதலுக்கும் இடையே நடக்கக்கூடிய ஒரு மாற்றத்தின் வெளிப்பாடாக இந்த நாவல் வெளிவந்திருக்கிறது.
ஜாதி ரீதியான பழக்க வழக்கங்கள், கோபதாபங்கள், ஜாதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூழலைக் காட்டும் பகுதிகளை நாவலாசிரியர் மிகக் கவனமாகக் கையாண்டுள்ளார்.
ஜாதி பற்றாளராக இருந்தாலும், அவரின் மனம் 'தன் ஜாதிக்காரர்கள் என்ன சொல்வார்கள்' என்கிற பிற மனங்களின் மதிப்பீடு குறித்துதான் உள்ளதே தவிர, மற்றபடி சண்டை சச்சரவு இல்லாத அமைதியான வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள் என்ற உண்மை நயமாக வெளிப்பட்டிருக்கிறது.
ஊர் சடங்குகள், கோயில் திருவிழாக்கள், குலதெய்வ வழிபாடுகள் என தனது வேர்களை மறக்காத சமூகத்தால்தான் உலகை வெல்ல முடியும் என்ற கருத்து மிக முக்கியமானது. இதைத்தான் இப்போதுள்ள தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டும்.
நாவலாசிரியரின் நாவல் ஒன்று ஏற்கெனவே திரைப்படமாகி இருக்கிறது; அதுவும் நெசவாளர் தொடர்பான கதைதான் என்கிற தகவலும், இதற்கு முன்பு நாவலாசிரியர் எழுதியுள்ள நூல்களின் கதைக்களமும் நெசவாளர் குறித்துதான் என்கிறபோது நிச்சயம் அவர் சொல்லும் தரவுகளும், கதைக் களங்களும், எழுத்துகளும் புனைவாக இருப்பினும், உண்மையிலிருந்து வெகு தொலைவுக்கு விலகிச் செல்லாது என நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.