

சிவாஜியும் கண்ணதாசனும்-காவிரிமைந்தன்; பக்.240; ரூ.280; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-600 094, ✆ 90805 29054.
நடிகர் திலகத்துடன் நெருங்கிப் பயணித்த பிரபலங்கள், அவரின் ரசிகர்கள் அவர் குறித்து பகிர்ந்து கொண்ட நினைவுகள் ஏராளமாக இருப்பினும், இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் புதுமையானவை. பராசக்தி முதல் படையப்பா வரை சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தின் தொடக்கத்திலும் நிறைவிலும் சிவாஜி கணேசன் குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன. சிவாஜி கணேசனுக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்களைக் குறிப்பிட்டு, அவை உருவான விதம், அவற்றிலுள்ள கவிநயம்,
இசை நயம், இலக்கிய நயம் எனப் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏழை அண்ணன், ஊனமுற்ற கணவன், உடல் நலம் குன்றிய மனைவி, காதல் தோல்வியால் மதுப் பழக்கம், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஓவியன் என நடிகர் திலகத்தைப் பற்றி சொன்னால், அவரோடு கவியரசரை இணைக்கும் பாடல் எது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதுதான் அந்த இரு சாதனை இமயங்களின் பெருமை.
எல்லாவற்றுக்கும் மேலாக 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' என்ற பாடலை மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் போட்டிப் பாடலாகத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், அதில் ஒரு வேத விளக்கத்தையே கவிஞர் தந்திருக்கிறார் என்று தொகுப்பாசிரியர் விளக்கிய விதம் அருமை. இந்த இரு பெரும் ஆளுமைகள் குறித்து பேசி, வியக்க, ரசிக்க, ஓர் எளிமையான தொகுப்பு நூலாக, இந்தத் தொகுப்பை அமைத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.