திரையெல்லாம் செண்பகப்பூ

திரைக் கடலில் பயணம் செய்து சாதிக்க நினைக்கும் பயணிகளுக்கு திசை காட்டும் கலங்கரை விளக்கமாய் இருக்கும் ஆளுமைகள் நடிப்புத் துறைக்கும், திரை இசைப் பாடல் துறைக்கும் சாதனைத் திலகமாய் விளங்கிய இருவரைப் பற்றிய புத்தகம் இது.
திரையெல்லாம் செண்பகப்பூ
Updated on
1 min read

திரையெல்லாம் செண்பகப்பூ-ஜா.தீபா; பக்.288; ரூ.340; விகடன் பிரசுரம், சென்னை-600 002, ✆ 80560 46940.

தரமான திரைப்படம் அனைவர் மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தான் பார்க்கும் திரைப்படத்துடன் தன்னைத் தொடர்புபடுத்தி, தன் வாழ்வின் சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, முடிவெடுக்கவும் தனக்கான தோழியாக நினைத்திருக்கும் தமிழ்ப் பெண்களைப் பற்றிய தொகுப்பாக இந்த நூலைப் பார்க்க முடிகிறது.

திரைப்படத்தை அதன் திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் வழியாக பார்ப்பதைவிட, பெண்களோடு தொடர்புடைய உடை, சிகை அலங்காரங்கள், தோழி, சமையலறை மற்றும் அண்ணி, சண்டைக்காரி, வாயாடி என எத்தனையோ திரைப்பட கதாபாத்திரங்களை தனது வாழ்வில் சந்தித்த நிஜ மாந்தர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை இணைத்து உணர்வு ரீதியாக பேசுகிறது இந்த நூல்.

மணமகளை வரவேற்க பாசமலர் திரைப்படத்தின் 'வாராயோ தோழி வாராயோ' என்ற பாடலை இசைத்தது ஒரு காலம் என்றால், இன்று 'சிங்க பெண்ணே! ஆண் இனமே உன்னை வணங்குமே' என்ற பாடல் வரவேற்புப் பாடலாக மாறி இருப்பதை இந்த நூலை வாசிக்கும்போது நாம் உணர்கிறோம். நம் வாழ்விலும் தமிழ் திரையுலகம் தன்னை இணைத்துள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.

உலகில் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழர்களும் உணர்வால் இணைவதற்கு பாலமாய் அமைவதில் தமிழ் திரையுலகுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த திரைக் கடலில் பயணம் செய்து சாதிக்க நினைக்கும் பயணிகளுக்கு திசை காட்டும் கலங்கரை விளக்கமாய் இருக்கும் ஆளுமைகள் நடிப்புத் துறைக்கும், திரை இசைப் பாடல் துறைக்கும் சாதனைத் திலகமாய் விளங்கிய இருவரைப் பற்றிய புத்தகம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com