ஊரும் உலகமும்

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் சூழலையும், அன்றைய நிலையையும் அறிய விரும்பும் இளைய தலைமுறையினர் இந்த நூலை வாசிக்கலாம்.
ஊரும் உலகமும்
SWAMINATHAN
Updated on
1 min read

ஊரும் உலகமும்- உதயை மு.வீரையன்; பக்.192; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021; ✆ 93805 30884.

பொதுவுடைமை இயக்கச் சிந்தனையாளர், தமிழ் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், 30 நூல்களை எழுதியவர் என பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரரான நூலாசிரியர் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதேநேரத்தில் இந்த நூல் வாழ்க்கை வரலாற்று நூலாக மட்டும் இல்லாமல், அரசியல், இலக்கியம், சமூக நிலை, விளிம்பு நிலை மக்களின் பிரச்னைகளையும் எடுத்துரைக்கிறது என்பது சிறப்பு.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் 1942-இல் பிறந்த நூலாசிரியரின் இளமைக்காலம், கல்வி, அரசியல் ஈடுபாடு, தமிழ்த் தொண்டு, இலக்கிய ஆர்வம் போன்றவற்றை குறிப்பிடப்படும்போது, அன்றைய காலத்தின் இனிமையான நிலைகளை அறிய முடிகிறது. 'ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை இருக்கிறது. அதில் வலியும் வேதனையும் இருக்கிறது. அந்த வாழ்க்கையைத் தேடி அலைந்ததை வரலாறாக எழுதியிருக்கிறேன்' என்று கூறும் ஆசிரியர் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளூர் முதல் உலக அளவிலான பல்வேறு தகவல்களை அளித்திருக்கிறார்.

சொந்த ஊரின் பெயர்க் காரணம், அன்றைய பண்ணையார்களின் வாழ்க்கை முறை, கிராமங்களின் அன்றைய சூழல், அரசியல்- சமூகப் பொருளாதார நிலை, கள்ளுக்கடையும் காவல் துறையும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், கல்லூரி வாழ்க்கை, அரசு நிர்வாக நிலை, மாணவர்க் கழகத் தேர்தல், ஆசிரியர் பணியில் ருசிகரமான விஷயங்கள், விருதுகள் என பல தகவல்களை 44 தலைப்புகளில் எளிய நடையில் எழுதியிருக்கிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் சூழலையும், அன்றைய நிலையையும் அறிய விரும்பும் இளைய தலைமுறையினர் இந்த நூலை வாசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com