திருக்குறள் நீதி இலக்கியம்

திருக்குறளை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் இலக்கிய உலகில் அது பெறும் இடத்தை மதிப்பிடும் பணியை இந்த நூல் செய்துள்ளது.
திருக்குறள் நீதி இலக்கியம்
SWAMINATHAN
Updated on
1 min read

திருக்குறள் நீதி இலக்கியம்-இலக்கிய விமர்சனம்-க.த.திருநாவுக்கரசு, பக்.376, ரூ.450, முல்லை பதிப்பகம், சென்னை-600 040, ✆ 98403 58301.

சங்க இலக்கியத்தில் அறம் என்ற சொல் வாழ்வியல் விழுமியங்களைப் பேசுவதாக உள்ளது. அறத்தின் பொருள் விரிந்த நிலையில், வடமொழி சொல்லான 'நீதி', 'ஒழுக்கநெறி'களை வலியுறுத்துகிறது.

நீதி இலக்கியம் என்ற நோக்கில் திருக்குறளை ஆராய்ந்து எழுதப்பட்ட முழுமையான நூல் இது. நீதி இலக்கியத்தின் இயல்புகள், இலக்கிய உலகில் நீதி இலக்கியத்துக்கான இடம், திருக்குறள் நீதி இலக்கியமாக விளங்கும் திறத்தையெல்லாம் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். உலகச் செம்மொழிகளில் தலைசிறந்து விளங்கும் நீதி இலக்கியங்களோடு திருக்குறளையும் ஒப்பிட்டு, ஆராய்ந்துள்ள பகுதி திருக்குறளின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவன.

இந்த நூல் சென்னை பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் மு.வரதராசனார் மேற்பார்வையில், க.த.திருநாவுக்கரசு நடத்திய ஆராய்ச்சியின் பயனாக வெளிவந்த ஆய்வுரை என்று நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறளை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் இலக்கிய உலகில் அது பெறும் இடத்தை மதிப்பிடும் பணியை இந்த நூல் செய்துள்ளது. இதில், 6 இயல்கள் உள்ளன. நீதி இலக்கியத்தின் இயல்புகள், வகைகளை விளக்கும் முதல் இயல், நீதிக்கும் அறத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கும் இரண்டாம் இயல், நீதி இலக்கியத்தின் பல்வேறு இயல்புகள் குறித்து விளக்கும் மூன்றாவது இயல். நீதி நூல்களின் இலக்கிய இயல்புகள் நான்காம் இயலிலும், உலகச் செம்மொழிகளாம் கிரேக்கம், லத்தீன், சீனம், சம்ஸ்கிருதம் மொழிகளில் சிறப்புற்று விளங்கும் நீதி இலக்கியங்களுடன், திருக்குறளை ஒப்பிட்டுக் காணும் ஆராய்ச்சி 5-ஆம் இயலிலும், இலக்கிய உலகில் திருக்குறள் பொருள் குறித்த ஆய்வு, தமிழ் இலக்கியத்தில் திருக்குறள் பெற்றுள்ள இடம் போன்றவை ஆறாவது இயலிலும் ஆராயப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com